Home /News /tamil-nadu /

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. தேர்வில் ஆள்மாறாட்டம்.. பாஜக மாவட்ட தலைவர் கைது

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. தேர்வில் ஆள்மாறாட்டம்.. பாஜக மாவட்ட தலைவர் கைது

பாஜக தலைவர் கைது

பாஜக தலைவர் கைது

பாஜக நிர்வாகி வீட்டில் தங்கி இருந்த திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருவாரூரில் உள்ள திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டத்திற்கான தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற தேர்வில் இளைஞர் ஒருவர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் அவர் திருவாரூரைச் சேர்ந்த திவாகர் மாதவன் என்பதும், அவர் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் என்பவருக்கு பதிலாக  தேர்வை எழுதுவதற்காக வந்தது தெரிய வந்தது .

    இதையடுத்து தேர்வு முதன்மை கண்காணிப்பாளர் நாகரத்தினம் புகாரின் பேரில், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய திவாகர் மாதவன் மற்றும் அவருக்கு உதவியதாக திருவாரூர் மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு  செயலர் ரமேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    ALSO READ  :  'திமுக அரசின் காவல் துறையில் இதயம், கல்லீரல் முதல் அனைத்து பாகங்களும் செயலற்று கிடக்கிறது' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

    மேலும் திவாகர் மாதவனிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அனைத்து  ஆவணங்களையும் கைப்பற்றினார்கள். அதில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரின் ஹால் டிக்கெட் மற்றும் அவருடைய புகைப்படம் ஒட்டிய ஏனைய பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவாரூர் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில்  திருவாரூரில் உள்ள ஒரு பாஜக நிர்வாகி வீட்டில் தங்கி இருந்த திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தார். அதன் பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    எஸ்.குருநாதன் செய்தியாளர்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: BJP, Thiruvarur

    அடுத்த செய்தி