முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கொரோனா அச்சுறுத்தல்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தேரோட்டம் ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தேரோட்டம் ஒத்திவைப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பல்வேறு விழாக்கள் ரத்து செய்யப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தாலும், நாளுக்கு நாள் அதிகரித்துவருவது குறைந்தபாடில்லை. அதனால், தமிழகத்தின் முக்கியமான நிகழ்வுகள் பலவும் ரத்து செய்யப்பட்டுவருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பல்வேறு விழாக்கள் ரத்து செய்யப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன.

குறிப்பாக மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் ஆழித்தேரோட்டம் அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் ஒன்று கூட கூடாது என்பதற்காக திருவாரூர் ஆழித்தேரோட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

Also see:

First published:

Tags: CoronaVirus