முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மொத்தமா போச்சே.. அறுவடை நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் வெளுத்த மழை.. வருந்தும் விவசாயிகள்!

மொத்தமா போச்சே.. அறுவடை நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் வெளுத்த மழை.. வருந்தும் விவசாயிகள்!

மாதிரி படம்

மாதிரி படம்

Tamilnadu crops damaged in rain | தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvarur | Nagapattinam | Tamil Nadu

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பலஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது.

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு முதலே கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக 15 ஆயிரம் ஏக்கர் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிர்கள் சாய்ந்தன. மேலும் தொடர்ந்து மழை பெய்தால் பல்லாயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் மழை நீரில் முற்றிலும் சாயக்கூடிய நிலை உருவாகியுள்ளது என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

இதே போன்று நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

First published:

Tags: Delta district crops, Heavy rain, Nagai, Tamil Nadu, Thiruvarur, Weather News in Tamil