மூடப்பட்ட மதுக்கடையைத் திறக்க வேண்டும் - ஆட்சியரிடம் மனு அளித்த கிராமவாசிகள்

தங்கள் கிராமத்தில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அரசு மதுபானக் கடையை மீண்டும் திறக்கக் கோரி திருவண்ணாமலை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்ட மதுக்கடையைத் திறக்க வேண்டும் - ஆட்சியரிடம் மனு அளித்த கிராமவாசிகள்
மீண்டும் மதுக்கடையைத் திறக்கக் கோரி திருவண்ணாமலை ஆட்சியரிடம் மனு
  • Share this:
திருவண்ணாமலை அடுத்த நரியாப்பட்டு கிராமத்தில் கடந்த 16 ஆண்டுகளாக வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடத்தில் செயல்பட்டு வந்த அரசு மதுபானக் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அக்கட்டடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், அரசு மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டனர். அதற்கான இடத்தைத் தேர்வு செய்து அங்கு கடையை மாற்றுவதற்கு அதிகாரிகள் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி, அறிக்கையை ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், தங்கள் கிராமத்தில் 16 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அரசு மதுபானக் கடை தற்பொழுது இல்லாததால், தச்சம்பட்டு காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் கள்ள மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன என்றும் மது வாங்குவதற்கு 10 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று வருவதால் பாதுகாப்பு இல்லை என்றும் மாவட்ட ஆட்சியருக்கு சிலர் மனு அளித்துள்ளனர்.


Also read: மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற இடத்தில் காதல்.. 40 வயது நபருடன் 20 வயது இளம்பெண் ஓட்டம்

மேலும், தங்கள் ஊரில் செயல்பட்டுவந்த அரசு மதுபானக் கடையினால் இதுவரை எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டதில்லை என்றும், உடனடியாக தங்கள் கிராமத்தில் அரசு மதுபானக் கடையை மீண்டும் திறக்க வேண்டுமெனவும் கூறி 15க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
First published: August 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading