சோலார் இஸ்திரி வண்டி உருவாக்கிய திருவண்ணாமலை பள்ளி மாணவி… குவியும் பாராட்டுகள்

சோலார் இஸ்திரி வண்டி உருவாக்கிய திருவண்ணாமலை பள்ளி மாணவி… குவியும் பாராட்டுகள்

மாணவி வினிஷா

Tiruvannamalai student - solar iron cart | சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் சூரிய சக்தி மூலம் இயங்கும் நடமாடும் இஸ்திரி பெட்டியுடன் கூடிய  வண்டியை கண்டுபிடித்து தேசிய விருது பெற்று திருவண்ணாமலை மாணவி சாதனை படைத்துள்ளார்.

  • Share this:
திருண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் வானவில் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர் உமாசங்கர். ஆன்லைன் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா தனியார் பன்னாட்டு பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் வினிஷா. இவர் தனியார் பன்னாட்டு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிறுவயது முதலே அறிவியல் சார்ந்த புத்தகத்தை படித்து வந்த மாணவி அறிவியல் மீதான நாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்ற வினிஷா வீட்டின் அருகாமையில் உள்ள இஸ்திரி கடைக்காரர் கரித்துண்டுகளை சாலையில் கொட்டி வைத்ததுடன் சிறிது நேரத்தில் கரித்துண்டுகளை குப்பையில் கொட்டி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருந்ததை கண்டுள்ளார். இதனை அறிவியல் பூர்வமாக செயல்படுத்தும் நோக்கில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக சூரிய சக்தி மூலம் இயங்கும் நடமாடும் இஸ்திரி பெட்டியுடன் கூடிய வாகனத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்து பல்வேறு கட்ட முயற்சிகளை செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் சூரிய ஒளியில் இயங்கும் நடமாடும் தன்மை கொண்ட இஸ்திரி பெட்டியுடன் கூடிய வாகனத்தை கண்டுபிடித்தார்.

இந்த வண்டியின் மேல்புறத்தில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டு, 100AH திறன்கொண்ட மின்கலன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த பேட்டரியை  5 மணி நேரம் சூரிய ஒளியைக் கொண்டு சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் வரை தொடர்ந்து இஸ்திரி செய்ய முடியும்.

தற்பொழுதுள்ள இஸ்திரி கடைக்காரர்கள், துணியை இஸ்திரி செய்ய மரங்களை வெட்டி இருந்து வரும் மரத்துண்டுகளை எரித்து, கரித்துண்டுகளை கொண்டு மாசு ஏற்படுத்தும் வகையில் இஸ்திரி செய்வதை தடுக்கும் வகையில், இதுபோன்ற புதிய கருவி கண்டு பிடித்ததாகவும், ஒருமுறை முதலீடு செய்தால் 7 முதல் 8 ஆண்டுகள் வரை இஸ்திரி கடைக்காரர்கள் பயன் பெறலாம் என்று தெரிவித்த மாணவி, இதற்காக 30 முதல் 40 ஆயிரம் வரை ஒரு முறை முதலீடு செய்தால் போதும் என்றும் அவர் தெரிவித்தார்.



இதற்காக கடந்த 2019ம் ஆண்டு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் இக்நைட் விருதை பெற்றதாகவும், இப்பொழுது ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஸ்வீடன் நாட்டின் துணைப் பிரதமர் இசபெல்லாலோவிடமிருந்து இன்று இணையவழி நிகழ்வில் பட்டயம், பதக்கம் மற்றும் பரிசுத்தொகை பெற்றுள்ளார்.

இந்த கண்டுபிடிப்பிற்காக பிரதமரின் 18 வயதிற்குட்பட்டவரின் உயரிய விருதான பாரத பிரதமர் பால் சக்தி புரஸ்கார் விருது இன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் குடியரசு தினத்தன்று வழங்குவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏராளமானோர் தனக்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்த அவருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடிக்கும்வரை பள்ளியின் சார்பில் மாணவிக்கு எவ்வித கட்டணமும் வசூலித்து கல்வி கற்பிக்கப்படும் என்று அதற்குண்டான நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: