ஆரணி அருகே சமூக இடைவெளியை மறந்து குவிந்த குடிமகன்கள்...!

ஆரணி அருகே சமூக இடைவெளியை மறந்து குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்க வரிசையில் நின்றனர்.

2 போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருந்ததால், கூட்டத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. 

 • News18
 • Last Updated :
 • Share this:
  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் சுமார் 500க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று கொண்டுள்ளனர்.

  கொரோன ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதிலும் இன்று திறக்கப்பட்டுள்ளன.

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 33 அரசு மதுபானக்கடை இயங்கி வந்தன. தற்போது இதில் 19 கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

  ஆகாரம் பகுதியில் காலை முதலே குடிமக்கள் குவிந்தனர். சமூக இடைவெளியை மறந்து, சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் வரிசையில் ஒருவருக்கு ஒருவர் நெருங்கியபடியே நின்று கொண்டிருந்தனர்.

  2 போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருந்ததால், கூட்டத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

  படிக்க: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை விபரங்கள் வெளியீடு - முழு பட்டியல்
  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sankar
  First published: