Karthigai Deepam | திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கருவறையை செல்போனில் வீடியோ எடுத்த நபர் மீது சைபர் கிரைமில் புகார்..

Karthigai Deepam | திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கருவறையை செல்போனில் வீடியோ எடுத்த நபர் மீது சைபர் கிரைமில் புகார்..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கருவறையை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய நபர்கள் மீது சைபர் கிரைமில் புகார் கொடுக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

  • Share this:
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. இதில் கோவில் கருவறையில் அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    அன்றைய தினம் பரணி தீபத்தை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் கோவில் ஊழியர்கள் அரசியல் கட்சியினர் என பல தரப்பினர் தரிசனம் செய்தனர். அப்போது சிலர் கருவறை மண்டபத்தில் பரணி தீபத்தை செல்போனில் புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்தனர்.

    இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் அண்ணாமலையார் கோவிலின் கருவறையை வீடியோவாக எடுத்து இதனை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர்.

    மேலும் படிக்க...Transport Workers Union | போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பு..

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் கருவறை காட்சியை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த காட்சியை நீக்கம் செய்யவும் சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுக்க முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: