ஆரணியில் காலையிலேயே டாஸ்மாக் கடையில் குவிந்த குடிமகன்கள்

மதுபானக் கடை

ஆரணி பேருந்துநிலையம் அருகிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் சமூக இடைவெளியின்றி குடிமகன்கள் குவிந்தனர்.

 • Share this:
  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரசு விதிகளை மீறி பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் அலைமோதிய குடிமகன்கள் முககவசம் சமூக இடைவெளியின்றி மதுபாட்டில் வாங்கி செல்வதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளன.

  இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. இரண்டாவது அலை பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறிவருகின்றன. நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், மருத்துவமனை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு போன்றவற்றை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் ஒவ்வொரு மாநிலங்களாக முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. புதிய கட்டுப்பாடுகளின்படி, பால் கடைகள், மருந்தகங்கள் மட்டும் 24 மணி நேரமும் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காய்கறி, தேனீர் கடைகள் மற்றும ஓட்டல்கள் மதியம் 12.00 மணி வரையில் மட்டுமே இயங்கலாம் என்றும் மற்ற அனைத்து கடைகளும் 14 நாட்களுக்கு திறக்ககூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
  ஆனால் டாஸ்மாக் மதுபானக்கடை காலை 8.00 மணி முதல் 12.00 வரையில் இயங்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

  மேலும் இன்று காலையில் ஆரணி டவுன் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் காலை முதலே கூட்டம் அலைமோதியது.

  மதுபானக் கடைகளில் மதுபானங்களை வாங்கி கடை அருகில் மது அருந்தி விட்டு முக்கிய சாலைகளான காந்தி சாலையில் குடிமகன்கள் தரையில் விழுந்து கிடக்கின்றனர். மேலும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட அரசின் எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் குடிமகன்கள் கூட்டம் அலைமோதியதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்படுட்டுள்ளன.
  இதனால் மார்க்கெட் வீதி அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை கொரோனா காலத்தில் மூட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: