திருவண்ணாமலை அருகே கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் பலி - நிர்கதியாய் சிகிச்சை பெரும் சிறுவர்கள்!

திருவண்ணாமலை அருகே கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் பலி - நிர்கதியாய் சிகிச்சை பெரும் சிறுவர்கள்!

விபத்து

கார் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்தின் மீது மோதியதில் சம்பவ இடத்தில் கணவன், மனைவியான ஸ்ரீபால், பத்மபிரியா, மாமியார் சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானர்.

  • Share this:
அரசுப் பேருந்தும், காரும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப உயிரிழந்தனர். சிறுவர்கள் இருவர் பலத்த காயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் முதன்மை பொறியாளராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீபால். அவரது மனைவி பத்மபிரியா. இவர்களுக்கு ஆர்யா (8) என்ற மகனும் மிருதுளா (12) என்ற மகளும் உள்ளனர்.

ஸ்ரீ பாலின் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சி நாளை (15.02.2021) திருவண்ணாமலையில் நடைபெற இருப்பதால், ஸ்ரீபால் அவரது மனைவி பத்மபிரியா மகன், மகள், மாமனார் சதீஷ், மாமியார் சாந்தி உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு சொந்தமான காரில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது, திருவண்ணாமலையில் இருந்து வேலூருக்கு சென்ற அரசுப் பேருந்து, திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்தின் மீது மோதியதில் சம்பவ இடத்தில் கணவன், மனைவியான ஸ்ரீபால், பத்மபிரியா, மாமியார் சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானர்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி தலைமையிலான குழுவினர் ஜேசிபி இயந்திரம் மூலம் காரில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மிருதுளா, ஆர்யா மற்றும் மாமனார் சதீஷ் ஆகியோரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

இதனிடையே சிகிச்சையில் பலனின்றி மாமனார் சதீஷ் (வயது 60) மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி அரவிந்த் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.
உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு வந்த கணவன், மனைவி, உள்ளிட்ட 4 பேர் கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலை அருகே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Published by:Arun
First published: