போலீஸ் மனைவியுடன் கள்ளக்காதல்... விஏஓ-விற்கு ஆசிட்வீச்சு... திருவண்ணாமலையில் பரபரப்பு

தாயை அலுவலகத்தில் கொண்டு சென்று விடும் போது ஞானசுந்தரிக்கும் சிவகுமாருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில்  கள்ளக்காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் மனைவியுடன் கள்ளக்காதல்... விஏஓ-விற்கு ஆசிட்வீச்சு... திருவண்ணாமலையில் பரபரப்பு
  • Share this:
திருவண்ணாமலை அருகே, காவலரின் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் மீது காவலர் ஆசிட் வீசித் தாக்குதல் நடத்தினார். இதில் காவலரும் கிராம நிர்வாக அலுவலரும் படுகாயமடைந்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் கிராமத்தில் உள்ள உண்ணாமலை நகரைச் சேர்ந்தவர்கள் 42 வயதான ஸ்ரீபால் - 30 வயதான ஞானசுந்தரி தம்பதி. இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருவண்ணாமலை கியூ பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார் ஸ்ரீபால்.

தென்றல் நகர் ஒன்பதாவது தெருவில் வசித்து வருபவர் 31 வயதான சிவக்குமார். இவர் திருவண்ணாமலை அடுத்த கிளிப்பட்டு கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். ஞானசுந்தரியின் தாய் விமலா வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிகிறார். தாயை அலுவலகத்தில் கொண்டு சென்று விடும் போது ஞானசுந்தரிக்கும் சிவகுமாருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில்  கள்ளக்காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.


இவர்களின் கள்ளக்காதலை கணவர் ஸ்ரீபாலும் மாமியார் விமலாவும் பலமுறை கண்டித்தும் பலனில்லாத நிலையில், தாலுகா காவல் நிலையத்தில் ஸ்ரீபால் புகார் அளித்தார். அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக அனுப்பிவைத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை சிவகுமார், தனது வீட்டிற்கு வந்து சென்றதாக ஸ்ரீபாலுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

Also Read : 'என்னை விட்டுவிடுங்கள்' 28 வயது இளைஞரை கதறவிட்ட 45 வயது ஃபேஸ்புக் காதலி

ஆத்திரமடைந்த ஸ்ரீபால், வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு மாமியார் விமலா உடன், கையில் ஆசிட் பாட்டிலை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அங்கு சிவகுமாருடன் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் தகராறாக மாறி கைகலப்பாக உருவெடுத்தது. கோபத்தின் உச்சியில் இருந்த ஸ்ரீபால், சிவகுமார் மீது ஆசிட்டை வீசித் தாக்கியுள்ளார்.இதில் சிவக்குமாரின் முகம் மற்றும் மார்புப் பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. ஸ்ரீபாலுக்கு தலை, கைககள், கால்களில் ஆசிட் தெறித்து காயங்கள் ஏற்பட்டுள்ளன. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அதையடுத்து மேல் சிகிச்சைக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிவக்குமாரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீபாலும் மாற்றப்பட்டுள்ளனர்.

Also Read : கள்ளக்காதலி வீட்டிலிருந்து ஆடையில்லாமல் தெருவில் ஓடி, போலீசில் சிக்கிய இளைஞர்!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவக்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். சிவக்குமாரின் மனைவி அளித்த புகாரின் மீது, ஸ்ரீபால் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கிழக்கு காவல்நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த ஆசிட் தாக்குதல் சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: November 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading