தீபாவளி பட்டு: ஆரணியில் அலைமோதும் கூட்டம்

வண்ணமயமான பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்ற ஆரணியில் புடவைகளை வாங்க வாடிக்கையாளர்களின் திருவண்ணாமலையை நோக்கி கூட்டம் அலைமோதுகிறது.

தீபாவளி பட்டு: ஆரணியில் அலைமோதும் கூட்டம்
அசத்தல் புடவைகள்
  • News18
  • Last Updated: November 2, 2018, 11:14 AM IST
  • Share this:
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டுக்கு பெயர்பெற்ற ஆரணியில் வண்ணமயமான கைத்தறி பட்டுப்புடவைகளை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பண்டிகை காலங்களில் பகட்டான பட்டுபுடவைகளை கட்டி மகிழ ஆர்வம் காட்டாத மகளிர் இருப்பது அரிது என்றே கூறலாம். அதுவும், தீபாவளி பண்டிகைக்கு பாரம்பரியமான பட்டுப்புடவைகளை கட்டி மகிழ்வதில் பெண்களுக்கு அலாதி பிரியம். தீபாவளி பண்டிகைக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு எடுப்பான உடைகளை தேர்வு செய்த பெண்கள், தங்களுக்கு பிடித்தமான பட்டுப்புடவைகளை வாங்க பிரபலமான பகுதிகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

ஆரணி பட்டுப்புடவைஅதன் ஒருபகுதியாக திருவண்ணாமலையில் வண்ணமயமான பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்ற ஆரணியில் புடவைகளை வாங்க வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கைத்தறியில் பல வண்ணங்களில் நேர்த்தியாக தயாராகும் இந்த கைத்தறி பட்டு சேலைகளை வாங்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் வந்து குவிகின்றனர்.

பட்டுக்கு பெயர்பெற்ற ஆரணி பட்டுப்புடவை


பாரம்பரியமான பட்டாடைகளை வாங்க ஆர்வம் காட்டும் பெண்களுக்கு புது வரவாக பிடித்த நிறத்தில், நினைத்த டிசைனில் புடவைகள் கிடைத்திருப்பதாக பூரிப்படைகின்றனர். மவுசு குறையாத கைத்தறி பட்டாடைகளை வாங்க ஆண்களும், பெண்களுமாக வந்து குவிவதாக மகிழும் விற்பனையாளர்கள், அதன் விற்பனையும் அமோகமாக நடப்பதாக ஆனந்தமடைகின்றனர்.Also see...
First published: November 2, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading