ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருவண்ணாமலை அண்ணாமலையர் கோவில் கார்த்திகை மகா தீபம் - நேரலை

திருவண்ணாமலை அண்ணாமலையர் கோவில் கார்த்திகை மகா தீபம் - நேரலை

மகா தீபம்

மகா தீபம்

கார்த்திகை தீப விழாவை ஒட்டி பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

  விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு மூலவர் அண்ணாமலையார் சன்னிதியில் பரணி தீபம் ஏற்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அரோகரா அரோகரா என விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர்.

  இதனிடையே இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேரும், வெளியூர் பக்தர்கள் 15 ஆயிரம் பேரும் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Tiruvanamalai