பாலியல் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வழக்கறிஞரை மிரட்டிய விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் - கட்சியிலிருந்து நீக்கிய திருமாவளவன்

தொல் திருமாவளன்

பாலியல் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வழக்கறிஞரை மிரட்டியவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து திருமாவளவன் நீக்கியுள்ளார்.

 • Share this:
  சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் கீழ்பாக்கம் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் எபிதாஸ். அவர், அங்கு பயின்ற மாணவி ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், விடுதியில் தங்கியிருக்கும் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

  இந்தநிலையில், கடந்த 2017-ம் வரும் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி எழுத்துப்பூர்வமாக தற்போது புகார் அளித்துள்ள நிலையில், சம்பவத்தின்போதே மாணவி விஷயத்தை பள்ளியின் அன்றைய முதல்வர் பிரான்சிசுக்கு கொண்டு சென்ற நிலையில் அப்போதைய முதல்வர் பிரான்சிஸ் என்பவர் விஷயத்தை காவல்நிலையத்துக்கு தெரிவிக்காமல எபிதாஸிடம் மன்னிப்புக் கடிதம் பெற்றுக்கொண்டு பெயரளவுக்கு நடவடிக்கை எடுத்து 15 நாட்கள் பணியிடை நீக்கம் செய்து மீண்டும் அதே பணியில் தொடர அனுமதி செய்துள்ளார்.

  இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீதர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், ‘ஆசிரியர் எபிதாஸின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பாலியல் புகாரை மறைத்த பள்ளியின் முன்னாள் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகார்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், அந்தப் புகாரில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் இருந்தது. தற்போது, பி.எஸ்.பி.பி பள்ளி விவகாரம் பெரிதான நிலையில் இந்த வழக்கையும் காவல்துறையினர் விசாரிக்கத் தொடங்கினர்.  இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் அணி பிரமுகர் தமிழ் கதிர் போன் செய்து, வழக்கை திரும்பப் பெறவேண்டும் என்று வழக்கறிஞரை மிரட்டியுள்ளார். இதுதொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து தமிழ் கதிரை திருமாளவன் நீக்கியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுதொடர்பாக அவருடைய ட்விட்டர் பதிவில், ‘கட்சியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ள பி.டி.ரவி என்கிற தமிழ்க்கதிர், மூன்று மாத காலத்திற்கு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார். அவர்மீது ஒழுங்கு நடவடிக்கைகுழு மேலும் விசாரணை நடத்தி மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published: