வள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது!

வள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது!
அர்ஜுன் சம்பத்
  • News18
  • Last Updated: November 6, 2019, 1:37 PM IST
  • Share this:
வள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்து பூஜை செய்து தீபாராதனை காட்டிய இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தை போலீசார் கைது செய்தனர். 

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரே கையில் எழுதுகோல் மற்றும் திருக்குறள் ஏந்தியபடி அமர்ந்த நிலையில் திருவள்ளுவர் சிலை உள்ளது. நேற்று முன்தினம் வள்ளுவர் சிலையின் மீது அடையாளம் தெரியாத சிலர் சாணத்தை வீசியும், கறுப்பு காகிதத்தால் கண்களை மறைத்தும் அவமதிப்பு செய்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து வள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்த நபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் காவி துண்டு, திருநீறு பூசி, ருத்திராட்ச மாலை அணிவித்தும், சூடம் ஏந்தியும் மரியாதை செய்தார்.


தஞ்சை மாவ்ட்டம் உடையாளூரில் உள்ள ராஜராஜசோழன் சமாதி அருகே அர்ஜூன் சம்பத்தை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
First published: November 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்