Home » News » Tamil-nadu » THIRUVALLUVAR DISTRICT ADMINISTRATION POSTPONED FEEDBACK MEETING FOR ADANI PORT EXTENSION SKD

அதானி துறைமுகம் விரிவாக்கம்: கருத்துக் கேட்பு கூட்டத்தை ஒத்திவைத்த மாவட்ட நிர்வாகம்

அதானி துறைமுக நிறுவனத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கப் பணிகளுக்காக 22ஆம் தேதி நடைபெறவிருந்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் மறுதேதி குறிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதானி துறைமுகம் விரிவாக்கம்: கருத்துக் கேட்பு கூட்டத்தை ஒத்திவைத்த மாவட்ட நிர்வாகம்
மாதிரிப் படம்
  • Share this:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா காட்டுப்பள்ளி கிராமத்திற்கு அருகில் காமராஜர் துறைமுகத்திற்கு வடக்கே அமைந்துள்ளதுதான் காட்டுப்பள்ளி துறைமுகம். அதானி நிறுவனத்திற்கு சொந்தமான இந்த துறைமுகம் தற்போது ஆண்டிற்கு 24.65 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் திறம் கொண்டது.

இத்துறைமுகத்தை துறைமுகத்தை 53 ஆயிரம் கோடி செலவில் ஆண்டுக்கு மொத்தமாக ஆண்டிற்கு 320 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் அளவிற்கு விரிவாக்கம் செய்ய அதானி துறைமுக நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்த விரிவாக்கப் பணிகளுக்கான சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதிகோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் வல்லுனர் மதிப்பீட்டுக்குழுவிடம் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதானி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த வல்லுனர் மதிப்பீடுக்குழு விரிவாக்கம் மேற்கொள்ளப்படவிருக்கும் பகுதியின் தற்போதைய நிலப் பயன்பாடு, கடலோர ஒழுங்காற்று மண்டல திட்டம் 2018-ன் படி நிலத்தின் தன்மை என்னவாக உள்ளது, விரிவாக்கப் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள கொசஸ்தலையாற்றின் பரப்பு எவ்வளவு? விரிவாக்கம் மேற்கொள்ளப்படவிருக்கிற நிலத்தின் உரிமையாளர்கள் யார் என்கிற விபரம் மற்றும் விரிவாக்கம் மேற்கோள்ளப்படவிருக்கிற இடத்தின் அனைத்துப் திசைகளிலும் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு வசிக்கும் மக்கள் தொகை, எவ்வளவு இத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய போன்ற விபரங்களை அறிய மூன்று பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது.

இந்தக் குழுவானது கடந்த ஜூன் மாதம் எண்ணூருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய பின்னர் சில நிபந்தனைகளோடு இந்திட்டத்திற்கு அனுமதி வழங்கலாம் என அறிக்கை சமர்ப்பித்திருந்ததன் அடிப்படையில் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை மத்திய சுற்றுச்சூழல் துறை 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கியது.


அதனடிப்படையில் தற்போது விரிவான திட்ட அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுகளை அதானி நிறுவனம் தயாரித்துள்ளது. அதன்படி மொத்தமாக 6,110 ஏக்கரில் இத்துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அதில் 336 ஏக்கர் நிலம் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டுள்ளது. 2,290 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது. 1,514 ஏக்கர் நிலம் தனியாருக்கு சொந்தமானது.
மீதமுள்ள 1,966 ஏக்கருக்கு கடற்பகுதியானது மணல் கொண்டு நிரப்பி நிலப்பகுதியாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இம்மாபெரும் திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டமானது ஜனவரி 22ஆம் தேதி காலை 11 மணிக்கு மீஞ்சூர் ஜெயின் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று தமிழகத்தின் எதிர்கட்சிகளான தி.மு.க, ம.தி.மு.க, நாம் தமிழர், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், SDPI,விசிக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் பொதுமக்கள் அதிகள் கூடும்போது கொரோனா பரவ வாய்ப்பிருப்பதால் நிர்வாக காரணங்களுக்காக மறு தேதி குறிப்பிடாமல் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 19, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories