ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.. விருதாளர்களுக்கு விருதுகளும் வழங்கினார்..!

திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.. விருதாளர்களுக்கு விருதுகளும் வழங்கினார்..!

திருவள்ளுவர் தினம் - முதலமைச்சர் மரியாதை

திருவள்ளுவர் தினம் - முதலமைச்சர் மரியாதை

பெரியார், அம்பேத்கர், திருவள்ளுவர், காமராசர் உள்ளிட்ட 9 தலைவர்களின் பெயர்களிலான தமிழ்நாடு அரசின் விருதுகளை, முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி விருதாளர்களை சிறப்பித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஆண்டுதோறும் தை மாதம் 2ஆம் நாள் திருவள்ளுவர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று வள்ளுவர் கோட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வள்ளுவர் கோட்டத்தை பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2023ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது இரணியன், நா.கு. பொன்னுசாமிக்கு வழங்கப்பட்டது. 2022ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது உபயதுல்லாவிற்கும், பெருந்தலைவர் காமராசர் விருது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் வழங்கப்பட்டன. பாரதியார் விருதை ஆ.இரா.வேங்கடாசலபதி, பாரதிதாசன் விருதை வாலாஜா வல்லவன் ஆகியோர் பெற்றனர்.

திரு.வி.க. விருது நாமக்கல் பொ. வேல்சாமி, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது கவிஞர் மேத்தா, தந்தை பெரியார் விருது கவிஞர் கலி.பூங்குன்றன், அண்ணல் அம்பேத்கர் விருது எஸ்.வி. ராஜதுரை, தேவநேயப் பாவாணர் விருது முனைவர் இரா.மதிவாணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

First published:

Tags: CM MK Stalin, Thiruvalluvar Day