Home /News /tamil-nadu /

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர் - திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர் - திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Thiruninravur : மனநிலை பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்து படுகொலை செய்த சம்பவம் திருநின்றவூரில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது

    திருநின்றவூரில் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

    திருநின்றவூர், கிருஷ்ணாபுரம், முதல் தெருவில் பச்சையப்பன் என்பவர் புதியதாக வீடு ஒன்றை  கட்டி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பச்சையப்பன் வீட்டில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் கிடந்தார். மேலும், அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டு அலங்கோலமாக இருந்தாக கூறப்படுகிறது. இதனை பார்த்த கட்டிட தொழிலாளிகள் பச்சையப்பனுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். இது குறித்து, பச்சையப்பன் திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    காவல் ஆய்வாளர்  ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதன் பிறகு, போலீசார் சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இதில், மர்மமான முறையில் இறந்து கிடந்தது, திருநின்றவூர், நத்தம்பேடு, அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுப்பெற்ற ரயில்வே ஊழியர் அழகேசன் என்பவரது மனைவி பாக்கியலட்சுமி (55) என்பது தெரியவந்தது. இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்.

    இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மேலும், பாக்கியலட்சுமி தினமும் வீட்டை விட்டு வெளியே சென்று சுற்றி விட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், கடந்த 30ந்தேதி இரவு முதல் பாக்கியலட்சுமி வீட்டிற்கு வரவில்லை இதனையடுத்து உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர் இருந்த போதிலும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், பாக்கியலட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

    Also Read : வயலில் புதைக்கப்பட்ட பெண் சடலம்.. கிராம மக்கள் அதிர்ச்சி

    மேலும், அவரது இறப்பில் போலீசாருக்கு சந்தேகமும் ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதி உள்ள கண்காணிப்பு கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள கேமராவில் பாக்கியலட்சுமியை திருநின்றவூர், நடுக்குத்தகை, பாடசாலை தெருவை சேர்ந்த சக்திவேல் (32) என்ற குப்பை பொறுக்கும் கூலித்தொழிலாளி அழைத்து சென்றது தெரியவந்தது இதனையடுத்து,  போலீசார் தலைமறைவாக சக்திவேலை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    Also Read:  மனைவியின் முன்னாள் காதலனை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவன் - திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்

    அதில், பாக்கியலட்சுமியை பச்சையப்பன் வீட்டுக்கு சக்திவேல் அழைத்து சென்று உள்ளார். பின்னர், அவரை வலுக்கட்டாயமாக சக்திவேல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அவரின் தலையை சுவற்றில் மோதி அடித்து சக்திவேல் கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். மேலும், போலீசார் அவர் வேறு ஏதேனும் குற்ற செயலில் ஈடுப்பட்டு உள்ளாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர்: கன்னியப்பன்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Death, Murder, Sexual abuse, Sexually harassed women

    அடுத்த செய்தி