பல் குத்தும் குச்சிகளைக்கொண்டு சிற்பங்கள் - பழவேற்காட்டில் அசத்தும் இளைஞர்

பல் குத்தும் குச்சிகளைக்கொண்டு சிற்பங்கள் - பழவேற்காட்டில் அசத்தும் இளைஞர்

குச்சிக்கலை

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் பல் குத்தும் குச்சிகளைக்கொண்டு சிற்பங்களைச் செய்து இளைஞர் அசத்திவருகிறார்.

 • Share this:
  திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு நடுவூர்மாதா குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியம் என்பவரது மகன் பினு சாஜன். பிஎஸ்சி வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர். மீனவர் குடும்பத்தைச் சார்ந்த இவர் ஸ்டிக் ஆர்ட் எனப்படும் குச்சிகள் மூலம் உலக அதிசயங்களான தாஜ்மகால், பைசாகோபுரம், உலகின் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனம், மிதிவண்டி, நீராவி ரயில் எஞ்ஜின், டச்சு காலத்து கப்பல்கள் என பல்வேறு கலை படைப்புகளை அவரது தந்தையுடன் இணைந்து உருவாக்கி வருகிறார்.

  ஒவ்வொரு படைப்புகளுக்கும் பத்தாயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆவதாகவும் இரண்டு மாதம் முதல் மூன்று மாதம் ஆவதாகவும் ஆரம்பகால கட்டத்தில் பரிசுப்பொருட்கள் வழங்குவதற்காக தனது படைப்புகளை பலர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றதாகவும் ஆனால் தற்போது அதனை விற்பதில்லை என்றும் சில ஆண்டுகளாக 25 விதமான படைப்புகளை உருவாக்கி வைத்துள்ளதாகவும் இதன் மூலம் பள்ளி கல்லூரிகளில் கண்காட்சி அமைத்து பழம்பெருமை வாய்ந்த கட்டிடங்களையும் உலக அதிசயங்களையும் அரிய பொருட்களையும் காட்சிப்படுத்தி மாணவர்கள் அதனை அறிந்துகொள்ளும் வகையில் செயல்படுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

  குச்சிக் கலை


  உலகம் முழுவதும் பல்வேறு கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இது போன்ற படைப்புகளை படைத்து வந்தாலும் 0.3 செமீ அளவிலான குச்சிகளைக் கொண்டு ஸ்டிக் ஆர்ட் மூலம் பல்வேறு கலைப் படைப்புகளை தான் மட்டுமே படைத்து வருவதாகவும் தனது பொருளாதார நிலை போதிய வருமானம் இல்லாத போதும் தனது தாய் தையல் பணி மூலம் கிடைக்கும் வருமானத்தில் தனக்கு உதவி வருவதாகவும் தந்தை தன்னுடன் இருந்து முயற்சிக்கு உறுதுணையாக உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘இது தனக்கு மன நிறைவைத் தருவதாகும் இதன் மூலம் கட்டிடக்கலை நுட்பங்களை அறியவும் மாணவர்கள் மேலும் பல அரிய படைப்புகளை படைப்பதற்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தான் செயல்படஉள்ளதாகவும் தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: