Home /News /tamil-nadu /

திருவள்ளூரில் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு சம்மர் கட்டிங்- தலைமை ஆசிரியர் அதிரடி

திருவள்ளூரில் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு சம்மர் கட்டிங்- தலைமை ஆசிரியர் அதிரடி

மாணவர்களுக்கு முடி திருத்தம்

மாணவர்களுக்கு முடி திருத்தம்

திருவள்ளூரில் பள்ளி வளாகத்தில்வைத்து மாணவர்களுக்கு முடித் திருத்தம் செய்யவைத்தார் பள்ளித் தலைமை ஆசிரியர்.

கால மாற்றத்திற்கு நம் சிகை அலங்காரத்திற்கு எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு. 1950களில் ஒட்ட வெட்டப்பட்ட வட்ட வடிவ சிகை அலங்காரம் 1970, 1980 கால கட்டங்களில் ஸ்டெப் கட்டிங், 90 காலக்கட்டத்தில் பங்க், 2000காலக்கட்டத்தில் போலீஸ் கட்டிங், அப்பாஸ் கட்டிங் என்று பரிணாமம் எடுத்தது.

தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்பைக்கட்டிங், டைல் கட்டிங் என கால மாற்றத்திற்கு ஏற்ப சிகை அலங்காரம் மாறிவருகின்றன.

பள்ளி  வளாகம் என்றால் மாணவர்கள் உயரிய ஒழுக்கத்துடன் திகழ வேண்டும் என்பதற்காக சீருடை தொடங்கி சிகை அலங்காரம் வரை கண்ணியமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் எப்போதும் பள்ளி வளாகங்களில் மாணவர்கள் இன்ன விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது ஒழுக்கம் சார்ந்த ஒன்று.

ஆனால் இன்றைய கால கட்டங்களில் குறிப்பாக பள்ளி மாணவர்களின் சிகை அலங்காரம் முதல் சீருடை வரை நவீன காலத்திற்கு ஏற்ப வடிவம்  மாறி இருக்கின்றது. அந்த வகையில் தான் இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப சிகை அலங்காரமும் சீருடை வடிவத்தையும் மற்றவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

ஆனால் பள்ளி வளாகத்திற்கு ஏற்ப அவை இருக்கின்றதா என்றால் இல்லை என்பதே அதற்கான பதிலாகும். அண்மைக்காலங்களாக மாணவர்கள் பள்ளி வளாகங்களில் ஆசிரியர்களை தாக்குவது, சக மாணவர்களை ராகிங் செய்வது, நாற்காலிகளை உடைத்தெறிவது என வரம்பு மீறி அத்துமீறி வருகின்றனர்.

அவர்களின் சிகை அலங்காரமும் வகுப்பறையில் ஒரு  மாணவன் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கத்திற்கு ஏற்ப உள்ளதா என்றால் இல்லை என்பதே உண்மை.

இந்த நிலையில்தான் திருவள்ளூர் மாவட்டம் திருவாரூர் அரசு மாதிரி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் அருணன் முறையாக சிகை அலங்காரம் செய்து கொள்ளாத மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திற்கு முடி திருத்துபவரை வரவைத்து சம்மர் கட்டிங் அடிக்க வைத்துள்ளார்.

வரிசையாக மாணவர்கள் அமர வைக்கப்பட்டு ஒவ்வொரு மாணவருக்கும் முறையாக சிலை அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் அருணன்  தெரிவிக்கையில், ‘தங்கள் இஷ்டத்திற்கு ஏற்ப மாணவர்கள் சிகை அலங்காரம் செய்து வருவதை கண்டிக்காமல் விடுவதால் அடுத்தடுத்து அவர்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தாமல் பயப்படாமல் வரம்பு மீறி செயல்பட தொடங்குவதாக தெரிவிக்கின்றார்.

முதற்கட்டமாக வரம்புக்குட்பட்ட மாணவர்கள் எவ்வாறு சிகை அலங்காரத்தை வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே  மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முறையாக சிகை அலங்கார கலைஞரை வரவைத்து சிகை அலங்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
Published by:Karthick S
First published:

Tags: Thiruvallur

அடுத்த செய்தி