Home /News /tamil-nadu /

தப்பி ஓடிய மணல் கொள்ளையர்கள்; பறிமுதல் செய்த மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற காவலர்கள்

தப்பி ஓடிய மணல் கொள்ளையர்கள்; பறிமுதல் செய்த மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற காவலர்கள்

பறிமுதல் செய்த மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற காவலர்கள்

பறிமுதல் செய்த மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற காவலர்கள்

போலீசாரை கண்டதும் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மாட்டு வண்டியை விட்டுவிட்டு தப்பியோடினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிய நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டியை போலீசாரே ஓட்டிச் சென்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம் ராம தண்டலம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டு சம்பவம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், புல்லரம்பாக்கம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை கண்டதும் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மாட்டு வண்டியை விட்டுவிட்டு தப்பியோடினர்.

    இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டியை காவலர் கலையரசன் ஓட்டிச் செல்ல, மற்றொரு காவலர் பாஸ்கரன் பின் அமர்ந்திருந்தார். போலீசாரே மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றதை, அப்பகுதியினர் வியந்து வேடிக்கை பார்த்தனர். மேலும், மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vijay R
    First published:

    Tags: Thiruvallur

    அடுத்த செய்தி