2009-ம் ஆண்டு நடைபெற்ற 15-வது மக்களவைத் தேர்தலின் போது திருவள்ளூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் அன்றைய சூழலில் புதிதாக உருவான ஆவடி, மாதவரம் சட்டமன்ற தொகுதிகளை இணைத்து திருவள்ளூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
15-வது மற்றும் 16-வது மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டு முறைகளும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த பி. வேணுகோபால் வெற்றி பெற்று திருவள்ளூர் தொகுதியை அ.தி.மு.க-வின் கோட்டையாக மாற்றியிருந்தார்.
16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வின் வேட்பாளர் பி. வேணுகோபால் 6,28, 499 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் 3,05,069 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோல்வியை தழுவினார்.
பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட தே.மு.தி.க-வின் வேட்பாளர் யுவராஜ் 2,04,734 வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் 43,960 வாக்குகளையும் பெற்று தோல்வியைச் சந்தித்தனர்.
Published by:Rahini M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.