திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர்
வழக்கறிஞர் பாஸ்கரன். இவரது மகள் அதிகை முத்தரசி, வயது 8. அப்பகுதியில் செயல்பட்டு வரும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார் அப்போது ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்க கோரியும் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி பலமுறை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை கோரிக்கை மனு அளித்திருந்தார்.
அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் வழக்கறிஞரான தனது தந்தையின் வழிகாட்டுதலின்படி கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவி அதிகை முத்தரசி பள்ளி சீர்கேடு தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதனை அடுத்து அக்டோபர் மாதம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மறு விசாரணையின்போது பள்ளி சீரமைக்கப்பட்டு இடம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மாணவி தரப்பில் மறுப்பு தெரிவித்து வாதம் முன்வைக்கப்பட்டதால் மறுப்பு மனு தாக்கல் செய்யும்படி மாணவி, அதிமுக அரசு தரப்பிற்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதன்படி மறுப்பு மனுவில் புதிய கட்டிடம் கட்டாமல் வெறும் வர்ணம் மட்டும் பூசிவிட்டு பள்ளி அமைக்கப்பட்டுள்ளதாக தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக மாணவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Also Read : எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியின் போது கட்சி பாகுபடுயின்றி நடந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி நடைபெற்ற இறுதி விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் சுந்தரேஷ் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அரசு வழக்கறிஞரை அழைத்து மாணவர்களின் கல்வி விவகாரத்தில் அரசு வறட்டு கவுரவம் பார்க்க கூடாது என்று
கண்டனம் தெரிவித்ததுடன் ஒரு ஆண்டுக்குள் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதன் காரணமாக மாணவி அதிமுக அரசு பள்ளி நிர்வாகம் தரப்பில் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப் பட்டதால் எதிர்கால நலன் கருதி பெற்றோர் மாணவி வேறு ஒரு தனியார் பள்ளியில் படிக்க சேர்த்தனர். தற்போது தமிழக முதல் அமைச்சர்
முக ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு ஒன்றை பதிவு தபால் மூலம் அனுப்பி உள்ளார் .அதில் கூறியுள்ளதாவது மீது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சீர்கேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் புதிய பள்ளி கட்டிட ஒரு ஆண்டுக்குள் கட்டித்தர வேண்டும் என உத்தரவிட்டு ஓராண்டுக்கு மேலாகியும் நீதிமன்ற உத்தரவு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வழக்கின் மனுதாரர் மற்றும் பள்ளி மாணவி என்கின்ற முறையில் தானும் தனது சார்பில் தந்தை அ.ஏ. பாஸ்கரன் மட்டுமின்றி கல்வி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் தொடர்ச்சியாக புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ள போதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் எங்களால் முடிந்தவரை அறவழியில் நின்று தொடர்ந்து போராடி வந்த போது பள்ளி நலன் சார்ந்த தங்களின் புகார் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
சிறுமியின் கடிதத்தை பெற்ற முதல்வர்
மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுக்கும் படி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று பிற்பகல் நேரில் பள்ளியை பார்வையிட்டு சட்டப் போராட்டம் நடத்தி வரும் எட்டு வயது மாணவி அதிகை முத்தரசி இல்லத்திற்குச் அமைச்சர் சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.