முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருவள்ளூர் மாவட்டத்தில் மழை.. சென்னை மக்களுக்கு நற்செய்தி..

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை.. சென்னை மக்களுக்கு நற்செய்தி..

மழை

மழை

5 நீர்த்தேக்கங்களிலும் அதன் மொத்த கொள்ளளவான 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடியில் தற்போது 9067 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது..

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை மக்களின் தாகம் தீர்க்க கூடிய பூண்டி புழல் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது

திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பூண்,டி புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய நீர்நிலைகள் கணிசமாக நீர்பிடிப்பு பகுதியிலிருந்து மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

ஒரே நாளில் பூண்டி அணையில் 58 மில்லியன் கன அடி கொள்ளளவு நீர்மட்டம் உயர்ந்து தற்போது 79.50 சதவீதம் நீர் இருப்பு உள்ளது செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரேநாளில் 49 மில்லியன் கன அடி நீர் மட்டம் உயர்ந்து தற்போது ஏரியில் 79.50 சதவீதம் நீர் இருப்பு உள்ளது

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஐந்து முக்கிய நீர்த்தேக்கங்களில் தற்போது மொத்தம் 81 சதவீதம் நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது அதன் விவரம்:

Dam

புழல் நீர்த்தேக்கம் அதன் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 2934 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது

அதன் மொத்த உயரம்

21 .20 அடியில் தற்போது 19.61

அடி உயரம் நீர் இருப்பு உள்ளது

நீர்வரத்து 331 கனஅடி வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது சென்னை குடிநீருக்காக 192 கனஅடி

வினாடிக்கு அனுப்பப்படுகிறது..

சோழவரம் நீர்த்தேக்கம் அதன் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது 0.674மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது

அதன் மொத்த உயரம்

18.86 அடியில் தற்போது14.99 அடி உயரம் நீர் இருப்பு உள்ளது

நீர்வரத்து 339 கனஅடி வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது நீர்த்தேக்கத்திலிருந்து

15 கன அடி

வினாடிக்கு வெளியேற்றப்படுகிறது

செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 2894மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது

அதன் மொத்த உயரம்

24 அடியில் தற்போது21.15 அடி உயரம் நீர் இருப்பு உள்ளது

நீர்வரத்து 715 கனஅடி வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது நீர்த்தேக்கத்திலிருந்து

151 கன அடி

வினாடிக்கு குடிநீருக்கு வெளியேற்றப்படுகிறது .

பூண்டி நீர்த்தேக்கம் அதன் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது 2565மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது

அதன் மொத்த உயரம்

35 அடியில் தற்போது 33 .15அடி உயரம் நீர் இருப்பு உள்ளது

நீர்வரத்து 765கனஅடி வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது

நீர்த்தேக்கத்திலிருந்து 94 கன அடி

வினாடிக்கு குடிநீருக்கு வெளியேற்றப்படுகிறது

5 நீர்த்தேக்கங்களிலும் அதன் மொத்த கொள்ளளவான 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடியில் தற்போது 9067 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.. தற்போது உள்ள நீர் இருப்பை வைத்து வருகின்ற 2022ஆம் ஆண்டில் குடிநீர் தேவை முழுமையையும் பூர்த்தி செய்ய முடியும் என சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் பார்த்தசாரதி, திருவள்ளூர்

First published:

Tags: Chennai, Chennai Rain, Thiruvallur