• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை வழிபாடு செய்ய பக்தர்களுக்கு தடை

திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை வழிபாடு செய்ய பக்தர்களுக்கு தடை

திருத்தணி முருகன் கோவில்

திருத்தணி முருகன் கோவில்

திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு  இன்று முதல் 5 நாட்களுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    முருகப்பெருமானின் 5ம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து சுவாமி தரிசனம் செய்வர். இந்தநிலையில் வரும் 2ம் தேதி கோயிலில் ஆடி கிருத்திகை விழா நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் வரும் 4ம் தேதி வரை கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் கோயில் குளத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் தெப்ப உற்சவ விழா நடப்பாண்டு நடைபெறாது என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளர். அதற்கு பதிலாக கோயில் காவடி மண்டபத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நீர்தேக்க தொட்டியில் உற்சவர் தெப்ப வைபவம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    விழா நிகழ்ச்சிகள் திருக்கோயில் இணையதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திடீரென தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், குமரக்கோட்டம். வல்லக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களிலும் ஆடி கிருத்திகை அன்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: