ஆன்லைன் ரம்மி: ₹7 லட்சம் இழந்த விரக்தியில் இளைஞர் தற்கொலை

Youtube Video

கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்கவே, கடும் மனஉளைச்சலுக்கு ஆளான பிரட்ரிக், திருப்பூருக்கு நடந்தே வந்து, தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 • Share this:
  ஆன்லைன் ரம்மியில் 7 லட்ச ரூபாயை இழந்த விரக்தியில், கோவையைச் சேர்ந்த இளைஞர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

  தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பல்வேறு தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், தமிழக அரசு அதை தடை செய்து உத்தரவிட்டது. இதனிடையே கடந்த 5ம் தேதி, திருப்பூர் கொங்கு பிரதான சாலை அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில், இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது.

  சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த நபரின் ஆதார் அட்டை மூலம் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான எல்வின் பிரட்ரிக் என்பதை கண்டறிந்தனர்.

  இவர் தனது தந்தை மற்றும் தாயாருடன் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் இளங்கோ நகரில் வசித்து வந்ததும், அருகில் உள்ள மோட்டார் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. திருமணமாகாத இவர், ஆன்லைன் ரம்மி மீது கொண்ட ஆர்வத்தால், தான் சேமித்து வைத்திருந்த மற்றும் கடனாக வாங்கிய 7 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயையும், சட்டவிரோத ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார்.

  இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்கவே, கடும் மனஉளைச்சலுக்கு ஆளான பிரட்ரிக், திருப்பூருக்கு நடந்தே வந்து, தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
  Published by:Yuvaraj V
  First published: