• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மனச்சோர்வா? ஊரடங்கில் மன அழுத்தத்தை குறைக்க இந்த எண்ணை அழையுங்கள்.. திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன்

மனச்சோர்வா? ஊரடங்கில் மன அழுத்தத்தை குறைக்க இந்த எண்ணை அழையுங்கள்.. திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன்

திருப்பூர் ஆட்சியர் பதிவு

திருப்பூர் ஆட்சியர் பதிவு

பல இடங்களில் தற்கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் போன் மூலமாக மனநல ஆலோசனை வழங்கும் புதிய எண்ணினை அறிமுகம் செய்துள்ளார்.

  • Share this:
கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வருமானம் இன்றி பல பொருளாதார சிக்கல்களையும், குடும்ப பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றனர் இதனால் பல இடங்களில் தற்கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் போன் மூலமாக மனநல ஆலோசனை வழங்கும் புதிய எண்ணினை அறிமுகம் செய்துள்ளார்.

அதாவது ஊரடங்கு காலத்தில் ஏற்படும் அதீத சோர்வு, கவலை, எரிச்சல், கோபம், நம்பிக்கையின்மை, தூக்கமின்மையால் உங்கள் வாழ்க்கையை பாதிக்கிறதா? கொரோனா வைரஸ் சூழல் உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டதாக உணர்கிறீர்களா? இந்த குழப்ப சூழ்நிலையை எதிர் கொள்ள உளவியல் நிபுணர்கள் இலவச ஆலோசனை பெற  உடனடியாக இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என 044 4631 5951 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளார்.

இந்த எண்ணிற்கு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை அழைத்துக் கொள்ளலாம் எனவும் தனது ட்விட்டர் பதிவில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Gunavathy
First published: