திருப்பூர் அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை நிறைவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஏழாயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில், அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
போட்டியில் 600 காளைகளும், 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர். வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் கடந்தாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதல் பரிசு வென்ற கட்டப்பா என்ற காளை, இந்தாண்டும் அபாரமாக விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.