• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருப்பத்தூர் அருகே 5 மாத கர்ப்பிணிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக புகார்.. ராணுவ வீரரான கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை

திருப்பத்தூர் அருகே 5 மாத கர்ப்பிணிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக புகார்.. ராணுவ வீரரான கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை

திருப்பத்தூர் அருகே 5 மாத கர்ப்பிணிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக பெண் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

  • Share this:
    திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (30). இவர் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சத்யவதனா (28) என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து தம்பதியர் பஞ்சாபிலுள்ள ராணுவக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

    சத்யவதனா 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த 12 நாட்களுக்கு முன்பு பஞ்சாபிலிருந்து விமானம் மூலமாக தம்பதியர் இருவரும் பெங்களூரு வந்திறங்கியுள்ளனர். அங்கு உறவினர் வீட்டில் இருந்துவிட்டு மறுநாள் சொந்த ஊரான ஆண்டியப்பனூர் பகுதிக்கு வந்துள்ளனர்.

    கணவர் மணிவண்ணனுடன் உயிரிழந்த மனைவி சத்தியவதனா.


    Also read: 18 ஆண்டுகளுக்கு இலவச வைஃபை பெற தன் குழந்தைக்கு இணைய நிறுவனத்தின் பெயரை சூட்டிய தம்பதி

    இதற்கிடையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு சத்தியவதனா கரு கலைந்து உதிரப் போக்குடன் திருப்பத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்பு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் அவரின் அண்ணன் சதீஷ் மற்றும் உறவினர்கள் அவரை வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.



    அதனைத் தொடர்ந்து சத்தியவதனாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் குரிசிலாபட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும், பிரேதப் பரிசோதனை முடிந்து பிறகு சத்தியவதனாவை வக்கணம்பட்டி தாய் வீட்டில் அடக்கம் செய்துள்ளனர். இந்த நிலையில், ஏற்கனவே ஒருமுறை சத்தியவதனா கருவுற்று அந்தக் கரு கலைக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், ராணுவ வீரரான கணவரும் அவரின் குடும்பத்தினரும் சத்தியவதனாவை கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். கருவைக் கலைக்க விஷ இலையைக் கரைத்து ஊற்றியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Also read: தலைக்கவசம் அணியாத ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த போலீஸ்!

    ஏற்கனவே மருத்துவமனையில் சோதித்துப் பார்த்தபொழுது பெண்ணின் உடம்பில் விஷம் கலந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியதாகவும் சத்தியவதனாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். அந்த சந்தேகத்தின் அடிப்படையில்தான் உடற்கூறு ஆய்வு நடைபெற்றிருக்கின்றது. இந்த நிலையில், சத்தியவதனாவின் அண்ணன் சதீஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் ராணுவ வீரரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குப் பின்னரே இதற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: