ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நியூஸ்18 செய்தி எதிரொலி.. 20 ஆண்டுகளாக இருளில் தவித்த மக்களுக்கு கிடைத்த வெளிச்சம்

நியூஸ்18 செய்தி எதிரொலி.. 20 ஆண்டுகளாக இருளில் தவித்த மக்களுக்கு கிடைத்த வெளிச்சம்

20 ஆண்டுகளாக கண்ணிருந்தும் குருடர்களாய் வாழ்ந்தவர்களுக்கு நியூஸ் 18 செய்தி எதிரொலியாக ஒளி பிறந்தது காட்டு நாயக்கர் சமூகத்தினர் பெருமிதம்.

20 ஆண்டுகளாக கண்ணிருந்தும் குருடர்களாய் வாழ்ந்தவர்களுக்கு நியூஸ் 18 செய்தி எதிரொலியாக ஒளி பிறந்தது காட்டு நாயக்கர் சமூகத்தினர் பெருமிதம்.

20 ஆண்டுகளாக கண்ணிருந்தும் குருடர்களாய் வாழ்ந்தவர்களுக்கு நியூஸ் 18 செய்தி எதிரொலியாக ஒளி பிறந்தது காட்டு நாயக்கர் சமூகத்தினர் பெருமிதம்.

  • 2 minute read
  • Last Updated :

20 ஆண்டுகளாக பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தியதால் மின்சார வசதி பெற முடியாமல் இருளில் தவித்து வந்த தங்களுக்கு நியூஸ் 18 செய்தி எதிரொலியாக மின்சாரம் வந்தது கண்ணிருந்தும் குருடர்களாய் வாழ்ந்துவந்த தங்களுக்கு ஒளி கொடுத்தது நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி சேனல் திருப்பரங்குன்றம் காட்டு நாயக்கர் சமூகத்தினர் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் ஜே.ஜே.நகர் பகுதியில்  வசித்து வரும் காட்டுநாயக்கன் சமூகத்தினர் 56 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததுள்ளனர். இதன்காரணமாக தங்களது வீடுகளுக்கு மின்சார வசதி பெற முடியவில்லை எனக்கூறி பல முறை அதிகாரிகளை சந்தித்தும் எந்த பலனும் இல்லை என வேதனையுடன் தவித்த காட்டு நாயக்கர் சமூக மக்களை நேரடியாக சந்தித்து நமது நியூஸ் 18 கள ஆய்வு மேற்கொண்டது.

பல்வேறு காரணங்களைச் சொல்லி அதிகாரிகள் பட்டா வழங்க காலம் தாழ்த்தி அலைக்கழிப்பு செய்ததாகவும் இதனால் மாநகராட்சி எல்லைப் பகுதியில் உள்ள தங்களது வீடுகளுக்கு மின்சார வசதி பெறமுடியாமல் 20 ஆண்டுகளாக இருளில் தவித்து வருவதாக கடந்த ஆகஸ்டு மாதம் நமது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது.

Also Read: இவங்க எல்லாமே என் மனைவிதான்.. சகலகலா கல்யாணராமன் சிக்கியது எப்படி?

செய்தி அறிந்த தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இப்பகுதிக்கு அதிகாரிகளை அனுப்பி உண்மை நிலவரத்தை அறிந்து அவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் பட்டா வழங்குவதற்கு முன்பாக வீடுகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து முதற்கட்டமாக 10 குடும்பங்களுக்கு மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இங்கு உள்ள 20 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து அவர்கள் வசித்து வந்த இடத்திற்கே நேரடியாகச் சென்று காட்டுநாயக்கர் சமூகத்தினருக்கு பட்டாவை வழங்கினார்.

Also Read:  தமிழகத்தில் ஒமைக்ரான் சமூகப் பரவலாக மாறிவருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதுகுறித்து கருத்து தெரிவித்த காட்டுநாயக்கன் சமூகத்தினர் மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக கண்ணிருந்தும் குருடர்களாய் தவித்து வந்ததாகவும் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் தங்களது கஷ்டங்களை புரிந்துகொண்டு செய்தி ஒளிபரப்பியதால் 20 ஆண்டுகளாக கண்ணிருந்தும் குருடர்களாய் இருள் சூழ்ந்த பகுதியில் வாழ்ந்து வந்த தங்கள் குடும்பங்களுக்கு ஒளி பிறந்ததாக பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

செய்தியாளர் - சிவக்குமார் தங்கையா (மதுரை)

First published: