Home /News /tamil-nadu /

எழுவர் விடுதலை தவறான முன்னுதாரணமாக இருக்கும் - திருநாவுக்கரசர் கருத்து

எழுவர் விடுதலை தவறான முன்னுதாரணமாக இருக்கும் - திருநாவுக்கரசர் கருத்து

திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

தேனி தொகுதியில் மறுவாக்குப்பதிவு வேண்டாம் என ஈவிகேஎஸ் இளங்கோவன் மனு கொடுத்ததாக தெரிகிறது. அப்படி அவர் மனு கொடுத்தால் அவருடைய கருத்து தான் என்னுடைய கருத்தும் கூட என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
    ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை கருணை அடிப்படையில் விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கருத்து என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

    தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் ஏழு பேரை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணம் என்று ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இதுதான் என்னுடைய கருத்தாகவும் இருக்கிறது எனறு தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அவரது குடும்பத்தினருக்கும் 7 பேர் மீது எந்த வித விரோதமும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று மனு கொடுத்திருக்கிறார்கள்.

    ஆனால் ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்பதால் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய திருநாவுக்கரசர் இந்தியா ஒரு ஜனநாயக நாடு தேர்தல் மூலம் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் தேர்தல் முடிந்த நிலையில் வாக்கு இயந்திரங்களை மாற்றுவது என்பது சரியான ஒன்றாக இல்லை இது கண்டனத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.

    தேனி தொகுதியில் மறுவாக்குப்பதிவு வேண்டாம் என ஈவிகேஎஸ் இளங்கோவன் மனு கொடுத்ததாக தெரிகிறது. அப்படி அவர் மனு கொடுத்தால் அவருடைய கருத்து தான் என்னுடைய கருத்தும் கூட என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Thirunavukkarasar

    அடுத்த செய்தி