நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் நிற்கவே வாய்ப்பு உள்ளது. அங்கு உதயநிதி ஸ்டாலின் நிற்க விருப்பப்பட்டால் அவருக்கு ஆதரவளிப்போம் என திருநாவுகரசர் தெரிவித்தார்.
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் நிற்கவே வாய்ப்பு உள்ளது. அங்கு உதயநிதி ஸ்டாலின் நிற்க விருப்பப்பட்டால் அவருக்கு ஆதரவளிப்போம் என திருநாவுகரசர் தெரிவித்தார்.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரிக்கும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், "நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக் கூட்டணியாக இருந்தது போல் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடர வேண்டும் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் விருப்பமாகும், என்னுடைய விருப்பமும் அதுதான்.
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இருப்பதால் உரிய நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் அ.தி.மு.க எம்.பி தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம் இல்லை என பேசியது தவறு.
தண்ணீர் பஞ்சம் இருப்பதால்தான் ஓ.பன்னீர் செல்வம் ரூ.1000 கோடி நிதி கேட்டார். இதையெல்லாம் தெரிந்து கொண்டு ரவீந்தரநாத் பேச வேண்டும். நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ தலையிடக் கூடாது.
ஒரே ரேஷன் கார்டு திட்டம் என்பது நடைமுறை சாத்தியமற்றது, அது தேவையில்லாதது. அ.ம.மு.க இந்தத் தேர்தலோடு முடிந்துவிட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தனித்து போட்டியிட வேண்டும் என கே.என்.நேரு பேசியது அவருடைய சொந்தக் கருத்து. அவர் கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. தேர்தலில் யார் யாருக்கு எத்தனை இடம் ஒதுக்குவது என்பதை கூட்டணியில் உள்ள அந்தந்தக் கட்சியின் தலைமையே முடிவெடுக்கும்.
உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா என்பதே சந்தேகமாக உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டால் தி.மு.க காங்கிரஸ் தோழமை கட்சிகளோடு கூடிப் பேசி முடிவெடுக்கும் சூழல் வர வேண்டும். திருச்சியில் நான் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றேன். என்னுடைய வெற்றிக்கு தி.மு.க காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருக்கு பங்கு உண்டு. இதில் தி.மு.க வின் பங்கு அதிகமாக உள்ளது.
சட்டமன்ற இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் எங்கு நின்றாலும் ஆதரவளிப்போம். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் நிற்கவே வாய்ப்பு உள்ளது. அங்கு உதயநிதி ஸ்டாலின் நிற்க விருப்பப்பட்டால் அவருக்கு ஆதரவளிப்போம்" என திருநாவுகரசர் தெரிவித்தார்.
Also watch: தென்னை மட்டை கழிவுகளிலிருந்து லாபமான தொழில் செய்வது எப்படி?
Published by:Anand Kumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.