ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருச்சியில் திருநாவுக்கரசர் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

திருச்சியில் திருநாவுக்கரசர் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

தமிழகத்தில் பாஜக-வுக்கு எழுந்துள்ள கடுமையான எதிர்ப்பலையால் அதிமுக கூட்டணிக்கு சற்றும் ஆதரவு இல்லாமல் போனது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சுமார் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சியைக் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ். திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸின் திருநாவுக்கரசர் இங்கு வெற்றி பெற்றுள்ளார்.

திருச்சியில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நேரத்திலேயே காங்கிராஸ் கட்சிக்குள் கடும் பூசல் இருந்தது. திருநாவுக்கரசருக்கு மேலிடத்தின் ஆதரவு இருந்தபோதிலும் தமிழக காங்கிரஸில் கடும் எதிர்ப்பு நிலவியது.

தொடர்ந்து கட்சித்தாவல், தொடர் தோல்வி என மிகுந்த பலவீனமான வேட்பாளராகவே திருநாவுக்கரசர் இருந்து வந்தார். ஆனால், தமிழகத்தில் பாஜக-வுக்கு எழுந்துள்ள கடுமையான எதிர்ப்பலையால் அதிமுக கூட்டணிக்கு சற்றும் ஆதரவு இல்லாமல் போனது.

திமுக உடனான கூட்டணியும் பாஜக-வின் மீதான வெறுப்புமே திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரின் வெற்றிக்கு உதவியுள்ளது.

சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றுள்ளார்.

First published:

Tags: Lok Sabha Election 2019, Tiruchirappalli S22p24