வேட்டி கட்டுவதிலும், குப்பை அள்ளுவதன் மூலமும் பிரதமர் மோடி விளம்பரம் தேடுகிறார் என்று காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு விமர்சனம் செய்துள்ளார்.
நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று சென்னை திரும்பிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், ‘இடைத்தேர்தலில் அ.தி.மு.க பணம் கொடுப்பதில் தான் மும்முரமாக இருக்கிறது.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க அரசு, பா.ஜ.க அரசு போல் செயல்படுகிறது. மத்திய அரசிற்கும் மாநில அரசுக்கும் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
இந்திய பிரதமரும் சீன அதிபரும் இங்கு வந்தது மகிழ்ச்சியானது தான். இதனால் மக்களுக்கு என்ன நடந்தது என்பது முக்கியம். பல கோடி செலவு செய்து நடந்த நிகழ்வு. இதனுடைய பயன் என்ன? சீன பொருட்கள் சந்தையில் அதிகளவில் இறக்குமதி ஆகிறது. ஆனால் நீண்ட நாட்கள் உழைக்காது. இந்தியாவை மார்க்கெட்டாக மாற்றாமல் வணிகர்கள் மற்றும் மக்கள் பயன் பெறும்
வகையில் ஒப்பந்தங்கள் இருக்க வேண்டும் என நம்புகிறோம்.
வேட்டி, சட்டை அணிவதால் தமிழராக முடியாது. குப்பைகளை எடுப்பது சாதனை கிடையாது. இதுமலிவான விளம்பரம். இதனால் மக்களுக்கு பயன் இல்லை. மோடி சாதனைகளால் மக்களைக் கவர வேண்டும். வேட்டி கட்டுவதாலும் குப்பை அள்ளுவதாலும் மக்களை கவர நினைக்கிறார்.
வேட்டி கட்டியதால் மோடி தமிழன் ஆகிவிட மாட்டார். ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது தொடர்பாக சீமான் தெரிவித்த கருத்திற்கு, புலிகளுக்கு உதவியது எம்.ஜி.ஆர் அரசு. அது மட்டுமல்லாமல் தனது பணத்தையும் செலவு செய்தார். இதனை மத்திய அரசுக்கும் இந்திராகாந்திக்கும் தெரியாமல் செய்யமுடியாது.
இன்னும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்கிறார். தனி ஈழம் என்பது பிரபாகரன் காலத்திலேயே சாத்தியமாகாத போது இப்போது எப்படி முடியும்? காங்கிரஸ் அரசு தான் அவர்களுக்கு வீடு கட்டிகொடுத்துள்ளது.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது வரலாறு தான். அதுவும் ஒரு சோக வரலாறு. இப்போது விடுதலைப் புலிகள் பற்றி பேசி பயனில்லை. தன்னுடைய கட்சி வளர்ப்பதற்காக இது போன்று பேசிவருகிறார். இப்படி சொல்லி கட்சி நடத்திக்கொள்ள நினைக்கிறார்கள்.
மோடி வேட்டி கட்டியதால் அந்த வேட்டி விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு வேண்டுமானால் லாபம் கிடைக்கலாம். மக்களுக்கு கிடைக்காது’ என்று தெரிவித்தார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thirunavukkarasar