இந்திய அமைதிப்படை மீதான சீமான் கோபம் சரிதான்! திருமாவளவன் ஆதரவு

இந்திய அமைதிப்படை மீதான சீமான் கோபம் சரிதான்! திருமாவளவன் ஆதரவு
தொல். திருமாவளவன்
  • News18
  • Last Updated: October 16, 2019, 11:10 PM IST
  • Share this:
ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சீமானின் கோபம் சரி தான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பார் சீமான், ‘இலங்கையில் தமிழர்களுக்கு அநீதி இழைத்தற்காக ராஜீவ் காந்தியை நாங்கள் கொன்றோம்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவருடைய பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அவருடைய கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரசாரம் செய்யும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இந்திய அமைதிப் படை மீதான சீமானின் கோபம் சரிதான். அமைதிப்படை இந்தியாவுக்கு திரும்பியபோது, அதனை அப்போதைய முதல்வர் கருணாநிதி வரவேற்க முடியாது என்று கூறினார். ஆனால், விடுதலைப் புலிகள் மறுத்த கருத்தைப் பேசும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.


Also see:

First published: October 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்