நள்ளிரவு வரை நீடித்த இழுபறி - சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி

சிதம்பரம் தொகுதியிலேயே தொடர்ந்து போட்டியிடுவதால் தொகுதி மக்களுக்கு நல்ல பரிட்சையமான வேட்பாளராகவே இருந்தது திருமாவளவனுக்குப் பெரிய பலமாக அமைந்தது.

Web Desk | news18
Updated: May 24, 2019, 8:27 AM IST
நள்ளிரவு வரை நீடித்த இழுபறி - சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி
திருமாவளவன்
Web Desk | news18
Updated: May 24, 2019, 8:27 AM IST
சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் 3219 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்றம் தொகுதியில் போட்டியிட்டார்.

கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திருமாவளவன் இதே சிதம்பரம் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2014-ம் ஆண்டு தோல்வியைத் தழுவியவர், இம்முறையும் சிதம்பரம் தொகுதியிலேயே போட்டியிட்டார்.

இம்முறையும் திமுக-வின் கூட்டணி வேட்பாளராகக் களம் இறங்கினாலும் சுயேட்சை சின்னத்திலேயே திருமாவளவன் தேர்தலைச் சந்தித்தார். சிதம்பரம் தொகுதியிலேயே தொடர்ந்து போட்டியிடுவதால் தொகுதி மக்களுக்கு நல்ல பரிட்சையமான வேட்பாளராகவே இருந்தது திருமாவளவனுக்குப் பெரிய பலமாக அமைந்தது.

சிதம்பரம் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளே இதுவரையிலான தேர்தல்களில் வெற்றி பெற்றிருப்பதும் கூடுதல் பலமகவே அமைந்தது.

எனினும், வாக்கு எண்ணிக்கையில் அவர் முன்னிலை பெறுவதும், பின்னடைவை சந்திப்பதும் என்று இழுபறியாகவே இருந்தது.

நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நீண்டது. 19-வது சுற்றில் திருமாவளவன் முன்னிலை பெற்ற நிலையில், அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் திடீரென வெளியிடப்படவே இல்லை.
Loading...
இதனால், முடிவுகளை அறிவிப்பதில் மிக தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக நள்ளிரவுக்கு மேல் அவர் 3219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
First published: May 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...