ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

10% இடஒதுக்கீட்டை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த போவதில்லை : அரசின் முடிவுக்கு திருமாவளவன் வரவேற்பு

10% இடஒதுக்கீட்டை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த போவதில்லை : அரசின் முடிவுக்கு திருமாவளவன் வரவேற்பு

தொல். திருமாவளவன்

தொல். திருமாவளவன்

உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்து ஏற்கனவே வழக்கு தொடுத்த தரப்பாக விசிக இருக்கிறோம். 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றக்கோரி தீர்ப்பை எதிர்த்து விசிக சார்பில் மறுஆய்வு மனுதாக்கல் செய்யப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக அரசு 10% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாது என அறிவித்திருப்பதை விசிக சார்பில் வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

  பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், வைகோ, திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

  கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது சமூகநீதிக்கு எதிரானது’ என்றார்.

  மேலும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக அரசு 10% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாது என அறிவித்திருப்பதை விசிக சார்பில் வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

  அதிமுக அரசு செய்த பிழையால் திமுக அரசு மறுஆய்வு மனுதாக்கல் செய்ய முடியாத நிலை உள்ளது. உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்து ஏற்கனவே வழக்கு தொடுத்த தரப்பாக விசிக இருக்கிறோம். 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றக்கோரி தீர்ப்பை எதிர்த்து விசிக சார்பில் மறுஆய்வு மனுதாக்கல் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

  இதையும் படிங்க: ஆண்டுக்கு ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? 10% இடஒதுக்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் கேள்வி

  அதேபோல இட ஒதுக்கீட்டுக்கான வரம்பு 50% என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு தகர்த்துள்ளது. எனவே, ஒபிசி இட ஒதுக்கீட்டையும் எஸ்சி இட ஒதுக்கீட்டையும் உயர்த்திட தமிழக அரசு முன் வரவேண்டுமென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விசிக சார்பில் வலியுறுத்தினோம் என்றார்.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: Reservation, Thirumavalavan