• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருமாவளவன் தனது கருத்தினை திரும்ப பெற்றுக்கொள்வது சரியாக இருக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திருமாவளவன் தனது கருத்தினை திரும்ப பெற்றுக்கொள்வது சரியாக இருக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜு (கோப்புப் படம்)

அமைச்சர் கடம்பூர் ராஜு (கோப்புப் படம்)

திருமாவளன் மட்டுமல்ல யாராக இருந்தாலும், யாரை பற்றி இழிவாக அல்லது மனது புண்படும்படி பேசினால் தவறு தான் என்றார் அமைச்சர்.

  • Share this:
    மனுஸ்மிருதி குறித்த கருத்தினை தெல்.திருமாவளவன் திரும்ப பெற்றுக் கொள்வது சரியாக இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    ஐரோப்பிய பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் கடந்த சில தினங்களுக்கு முன் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனுஸ்மிருதியில் பெண்கள் குறித்து இழிவாக குறிப்பிட்டிருப்பதாக அதனை விவரித்தார்.

    அதனையடுத்து, அவர் பேசியதில் ஒரு பகுதி மட்டும் எடிட் செய்யப்பட்டு இணையத்தில் வைரலானது. பெண்கள் குறித்து திருமாவளவன் இழிவாக பேசிவிட்டார். அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று குஷ்பு காட்டமாக விமர்சனம் செய்தனர். மேலும், திருமாவளவன் மீது காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவாகரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் திருமாளவனனுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

    இந்நிலையில் கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில்,  திருமாவளன் மட்டுமல்ல யாராக இருந்தாலும், யாரை பற்றி இழிவாக அல்லது மனது புண்படும்படி பேசினால் தவறு தான். அவர் சொல்லியது தவறான கருத்து என்றும், அவர் குறிப்பிடும் நூலில் திருமாவளவன் சொன்னது போன்று சொல்லவில்லை என்று பலரும் கூறியுள்ளனர். அதையெல்லாம் புரிந்து கொண்டு, இழிவுப்படுத்தும் நோக்கில் சொல்லி இருந்தால் திருமாவளவன் திரும்ப பெற்றுக்கொள்வது சரியாக இருக்கும் என்றார்.

    மேலும், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ற ஆராய்ச்சிக்கு போக வேண்டிய தேவை இல்லை. முன்னணி நடிகர்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அடிக்கடி சந்திப்பது வழக்கம். எந்த நோக்கத்திற்காக ரசிகர் மன்ற நிர்வாகிகளை பார்த்தேன் என்று நடிகர் விஜய் சொன்னால் அதற்கு பதில் சொல்ல முடியும். ஆண்டுக்கு இரண்டு முறை நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது வழக்கம் அந்த முறையில் சந்தித்து இருக்கலாம். மன்ற நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அரசியல் என்ற வார்த்தையே வரவில்லை. இல்லாத ஒன்றை பற்றி நாம் பேசுவது சரியாக இருக்காது என்றும் தெரவித்தார்.

    தொடர்ந்து பேசிய கடம்பூர் ராஜூ, திரையரங்குகள் உரிமம் புதுப்பிக்கும் காலத்தினை 3 ஆண்டு என்று உயர்த்தியதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படுள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். வரும் 28ந்தேதி மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் காணொலி காட்சியில் ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளார். வரும் 1ந்தேதிக்கு பின்னர் ஊரடங்கு தளர்வு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் போது அதில் ஒரு அம்சமாக திரையரங்குள் திறப்பு பற்றி ஆலோசனையும் இடம் பெறும் என்றும் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: