Home /News /tamil-nadu /

சுயேட்சையாக போட்டியிடும் விசிக அமைப்பு செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம் - திருமாவளவன்

சுயேட்சையாக போட்டியிடும் விசிக அமைப்பு செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம் - திருமாவளவன்

தொல்.திருமாவளவன்

தொல்.திருமாவளவன்

கட்சிக்கும் தலைமைக்கும் களங்கள் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகக் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு செயலாளரை நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார் திருமாவளவன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் திருமாறன் திட்டக்குடி (தனி) தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

    தனக்கு சீட் தராததால் கட்சியின் மீதிருந்த அதிருப்தியின் காரணமாக அவர் இவ்வாறு செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார் திருமாவளவன்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “விசிக மண்டல அமைப்புச் செயலாளர் திருமாறன் என்கிற அய்யாசாமி திட்டக்குடி (தனி) தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் என்பது கட்சித் தலைமையின் கவனத்துக்கு வந்தது.

    உடனடியாக அம்மனுவை திரும்பப் பெற வேண்டுமென அவருக்குத் தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்டது. ஆயினும் அவர் அவ்வாறு திரும்ப பெறாமல் சுயேட்சை சின்னத்தைப் பெற்று வேட்பாளராக போட்டியிடுவது கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். அத்துடன், நாம் அங்கம் வகிக்கும் கூட்டணியின் நல்லிணக்கத்துக்கும், அரசியல் நேர்மைக்கும் எதிரான நடவடிககியாகும். கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ள திருமாறன் கட்சியின் மண்டல செயலாளர் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் நீக்கப்படுகிறார்.

    கட்சியின் பொறுப்பாளர்கள் எவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள திருமாறனுடன் கட்சி சார்ந்து எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது” இவ்வாறு திருமாவளவன் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Thol. Thirumavalavan, TN Assembly Election 2021, VCK

    அடுத்த செய்தி