• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்! தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்! தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

திருமாவளவன் MP

திருமாவளவன் MP

கீழடியை நேரில் சென்று ஆய்வு செய்தேன். தமிழினத்தின் தொன்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது உலக அரங்கில் தமிழனுக்கு தலை நிமிர்வை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் தரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    சென்னை விமானநிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘நாங்குநேரி விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக வாக்கு சேகரித்து வருகிறோம். 14-ம் தேதிக்கு பிறகு தி.மு.க மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன். அதற்கான தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

    மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு அதற்கான அனுமதியை வழங்காது எனவும், வழங்கக்கூடாது எனவும் நம்புகிறோம். மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

    இதுதொடர்பாக தமிழக அரசு விழிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.  இதுதொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. இதுகடந்த காலங்களில் நடந்துள்ளதாக குறிப்பிட்டார்.

    இடைத்தேர்தல்களைப் பொறுத்தவரை
    ஆளும் கட்சியினர் எப்பொழுதுமே வெற்றிபெற அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் அப்படி ஆளுங்கட்சியினர் தீவிரமாக முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்..

    அம்பேத்கரின் சிலை அவமதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து வருகிறது. அதனை தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருவது சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக முடிந்துவிடும். உலக நாடுகள் மதிக்கும் அம்பேத்கரை தமிழகத்தில் தொடர்ந்து அவமதித்து வருவது தலைதூக்கி இருக்கிறது. இதுபோன்று தலைவர்கள் சிலையை அவமதிப்பதை தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். கீழடியை நேரில் சென்று ஆய்வு செய்தேன். தமிழினத்தின் தொன்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது உலக அரங்கில் தமிழனுக்கு தலை நிமிர்வை ஏற்படுத்தியுள்ளது.

    கீழடி சுற்றியுள்ள 110 ஏக்கரில் பல்வேறு புதைபொருள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஆய்வுகளை மேற்கொண்டு தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: