Home /News /tamil-nadu /

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி- மத்திய அமைச்சரிடம் திருமாவளவன் கடிதம்

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி- மத்திய அமைச்சரிடம் திருமாவளவன் கடிதம்

திருமாவளவன்

திருமாவளவன்

Thirumavalavan | Booster Dose | 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கவேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

    ஒமிக்ரான் தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மத்திய அமைச்சரிடம் கடிதம் அளித்துள்ளார்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவைச் சந்தித்து கடிதம் அளித்துள்ளார். அந்த கடிதத்தில், ‘மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தபடி ஓமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. டெல்லியில் ‘சீக்வென்ஸ்’செய்யப்பட்ட கோவிட் மாதிரிகளில் 46% மாதிரிகள் ஓமிக்ரான் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஜனவரி 2022 இறுதிக்குள் இந்தியாவில் நாளொன்றுக்கு 1.5 லட்சம் புதிய நோய்த்தொற்று இருக்கும் என்று தரவு விஞ்ஞானிகளின் மதிப்பீடு உண்மையாகி வருகிறது.

    60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணைநோய் உள்ளவர்களுக்கும் ‘பூஸ்டர் டோஸ்’ கொடுக்கலாம் எனப் பிரதமர் அறிவித்துள்ளார். நாங்கள் அதை வரவேற்றாலும், கடந்த டெல்டா அலையின் போது இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதைத் தங்களது கவனத்துக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

    இந்தியாவில் 8 மாவட்டங்களில் 10%க்கும் அதிகமாக தொற்று - மத்திய சுகாதாரத்துறை!




    "நாட்டில் ஏற்படும் கோவிட்-19 இறப்புகளில் சுமார் 88 சதவிகிதம் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு நிகழ்கின்றன. அவர்களே அதிகம் பாதிக்கப்படக்கூடிய குழுவாக உள்ளனர்" என்று மத்திய சுகாதார செயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ‘பூஸ்டர் டோஸ்’ கொடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஓமிக்ரான் நோய்த்தொற்றைத் தடுப்பதில் அதிக வீரியம் உள்ள எம்ஆர்என்ஏ தடுப்பூசியை ‘பூஸ்டர் டோஸாக’வழங்க அனுமதிக்குமாறு மத்தியஅரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Corona, Omicron

    அடுத்த செய்தி