திருமாவளவன் அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் - குஷ்பு காட்டம்

மனுதர்மத்தில் இந்துப் பெண்கள் அனைவரும் இழிவாக நடத்தப்பட்டதாக திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது

திருமாவளவன் அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் - குஷ்பு காட்டம்
குஷ்பு
  • Share this:
திருமாவளவன் அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

இந்துப் பெண்கள் குறித்து இழிவாக பேசிய திருமாவளவன் அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என குஷ்பு தெரிவித்துள்ளார். மனுதர்மத்தில் இந்துப் பெண்கள் அனைவரும் இழிவாக நடத்தப்பட்டதாக திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இதற்கு சமூக வலைதளங்கள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திருமாவளவனுக்கு எதிராக பல்வேறு ஹேஸ்டேக்குகள் டிரெண்ட்டாகி வருகின்றன.

இந்நிலையில், தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பு, மனுதர்மத்தில் எங்கேயும் பெண்கள் குறித்து இழிவான வார்த்தைகள் இல்லை என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திருமாவளவனின் பேச்சு குறித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.


Also read: அப்பலோ மருத்துவமனையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமிஇந்நிலையில், மனுஸ்மிருதி பிற்படுத்தப்பட்ட மக்களையும் ஆதிக்குடிகளையும் பெண்களையும் இழிவுபடுத்துவதாகவும், அதற்கு தடை வேண்டும் என்றும் வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
First published: October 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading