தூத்துக்குடி, மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை 4வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு தமிழக அரசு நினைவாக நினைவு தூண் அமைக்க வேண்டும்.
சிபிஐ விசாரணை அறிக்கை மக்களுக்கு நிதி வழங்காது என்பதால் தமிழக அரசு மீண்டும் அதை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். மே 25 முதல்31 வரை மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் வேலைவாய்ப்பு நெருக்கடியை அம்பலப்படுத்தும் வகையில் இடது சாரி கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு வார பரப்புரை நடத்தபட உள்ளோம்.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன், சிபிஐ லிபரேஷன் கட்சியின் மாநில செயலாளர் நடராஜன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இணைந்து மே 27 சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு பாஜக அரசியல் செய்யும் களத்தை தேடுகிறது. பெட்ரோல், டீசல் விலை சமையல் எரிவாயு ஏற்றத்துக்கு முழு பொறுப்பு மத்திய அரசு தான் காரணம், கலால் வரி வசூலிப்பது மத்திய அரசு தான் 200சதவிகிதம் உயர்த்திவிட்டு மிக சொற்பமான முறையில் குறைத்து விட்டு பெட்ரோல், டீசல் விலை குறைத்துவிட்டதாக மக்களை பாஜக ஏமாற்றி வருகிறது. தமிழக அரசு 3ரூபாய் வரை வரி விதிப்பில் குறைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பிரதமர் மோடி சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அயல் நாடுகளில் பதுக்கி வைத்த பணத்தை வங்கியில் மக்களுக்கு கொடுப்பதாக சொன்னார் ஆனால் அதை நிறைவேற்றவில்லை. அந்நிய முதலீடு நாட்டுக்கு பயன் பெரும் என்று சொல்வது போதாது, கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெறுவதற்கு மோடி அரசின் பொருளாதார கொள்கை வழிவகுக்கிறது.
8 ஆண்டு கால ஆட்சியில் அதானியை 4வது 5வது இடத்தில் கொண்டு பொய் நிறுத்தியுறுப்பது தான் மோடி அரசின் சாதனை, எந்த நாட்டிலும் இருந்து அந்நிய முதலீட்டை இந்தியாவுக்கு கொண்டு வந்தாலும் மக்களின் நலனிற்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் அமையாது. மோடியின் நண்பர்களுக்கு தான் அது பயன் பெறும் என்றார்.
Must Read : சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்திய யூட்யூபரை கைது செய்ய வேண்டும் - சிவனடியார்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
மேலும், நெல்லை கல்குவாரியில் இறந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்க அரசு முன் வர வேண்டும். சட்டவிரோதமாக கல்குவாரி ஆழம் தோண்டப்பட்டதாகவும், புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆகவே புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும் என திருமாவளவன் கூறினார்.
செய்தியாளர் - பி. முரளி கணேஷ், தூத்துக்குடி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.