ஆர்.எஸ்.எஸ். சமஸ்கிருதத்தை எதிர்ப்பவர்கள் தான் திராவிடர்கள். தெலுங்கர்களை எதிர்ப்பது அல்ல, பெரியார், ஆரியர்களை எதிர்த்தார். எனவே பெரியாரை ஆரியர்கள் எதிர்க்கின்றனர். இந்திய அளவில் பட்டியலின மக்களை, ஒற்றுமையாக இருப்பதை பாஜக உடைத்து விட்டது. சமூக நீதி என்ற கோட்பாடு தான் அவர்களுக்கு எதிரி என மதுரையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
மதுரையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் செஞ்சட்டை பேரணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் வர்க்க, வருண, ஆதிக்க ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
நாகை திருவள்ளுவன், கோவை ராமகிருஷ்ணன், பேராசிரியர் ஜெயராமன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். அப்போது, பேரறிவாளன் விடுதலை போல் மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட வேண்டும். காவல் சித்ரவதை மரணங்கள் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துகள் குறித்து பேசப்பட்டது.
இதை தொடர்ந்து, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், “எஸ்.சி, எஸ்.டி (SC, ST) மக்கள் இந்தியா முழுவதும் 30 கோடி மக்கள் உள்ளனர். வர்க்க ஆதிக்க எதிர்ப்பு என்றால் இந்துத்துவா எதிர்ப்பு. பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு இல்லை. ஆரிய இனத்தில் உள்ள டி.என்.ஏ. (DNA) வேறு, திராவிடர் டி.என்.ஏ (DNA) வேறு, ஆரிய கருத்துக்கு எதிரானவர்கள், அனைவரும் திராவிடர்களே. எனவே அம்பேத்காரும் திராவிடரே.
சைவ, வைணவ மதங்கள் பிராமண மதங்கள் இல்லை. வேதங்களே, பிரமாணர்களின் மதம். இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். அவர்கள் அந்த காலத்தில் நாகர்கள் என அழைக்கப்பட்டனர். அவர்கள் தமிழர்கள் என டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார். அம்பேத்கரியம், பெரியாரியம், மார்க்சியம் ஆகியவை, பார்பனியத்தையும், முதாலாளித்துவத்தையும் எதிர்க்க கற்று கொடுத்தவை. ஆதிக்கத்தை அடி மரத்தொடு வெட்டி விட வேண்டும். மேல் கட்டமானத்தை வெட்டுவது முக்கியமல்ல.
இந்திய அரசியலமைப்பு எல்லா நேரங்களிலும் வேலை செய்வதில்லை. தேர்தலின் போது மட்டுமே வேலை செய்கிறது. அதற்கு பிறகு இந்தியாவில் மனு தர்மம் தான் வேலை செய்கிறது. வஞ்சகத்தால் வளைப்பதும், வன்முறைகள் கட்டவிழ்த்து விடுவதும்தான் ஆரியத்தின் வேலை. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆகியோர் பிராமணர்கள் அல்ல. ஆனால் பிராமணர்களுக்காக வேலை பார்ப்பார்கள்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக அதிகமானோர் பிராமணர்கள் தான் உள்ளனர். இதை மாற்ற முடியாது. ஆர்.எஸ்.எஸ். (RSS) அமைப்பில் சித்பவன் என்ற அய்யர்களே தலைவராக முடியும்.
ஆர்.எஸ்.எஸ். சமஸ்கிருதத்தை எதிர்ப்பவர்கள் தான் திராவிடர்கள். தெலுங்கர்களை எதிர்ப்பது அல்ல, பெரியார் ஆரியர்களை எதிர்த்தார். எனவே, பெரியாரை ஆரியர்களை எதிர்க்கின்றனர்.
இந்தியாவை வல்லரசு ஆக்குவதற்கு பதிலாக, மசூதியை இடிப்பார்கள். பைபிளை எரிப்பார்கள். இந்திய அளவில் பட்டியலின மக்களை, ஒற்றுமையாக இருப்பதை பாஜக அமைப்பு உடைத்து விட்டது. சமூக நீதி என்ற கோட்பாடு தான் அவர்களை தடுக்கிறது. ஆயுதம் இல்லாத புரட்சியை அரசியலமைப்பு மூலம் செய்தவர் டாக்டர் அம்பேத்கர். ஆரிய கருத்துக்கு எதிரானவர்கள் அனைவரும் திராவிடர்களே, எனவே அம்பேத்கரும் திராவிடரே” இவ்வாறு பேசினார் திருமாவளவன்.
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், திமுக தலைவர் மு.கருணாநிதி சமத்துவபுரம் அமைத்தார். தோழர் சங்கரையா களமாடிய மண் மதுரை என தெரிவித்தார். 1925 ஆண்டு ஆர்.எஸ்.எஸ். உருவானது. கடந்த 8 ஆண்டுகளாக பாஜகவின் மதவாத ஆட்சி நடைபெறுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆர்.எஸ்.எஸ்-ன் சின்னமான திரிசூலத்தை, சிவப்பு சட்டை பேரணி முறிக்கும். மத்தியில் கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக அரசு, கார்ப்பரேட் அரசாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ்-க்கு அதானி உதவி செய்கிறார். அதானிக்கு ஆர்.எஸ்.எஸ். உதவி செய்கிறது. 38 லட்சம் கோடி சொத்து உள்ள எஸ்.ஐ.சி (LIC) யை விற்க முயற்சிக்கின்றனர். இதை தடுக்க வேண்டும். ஆணவ படுகொலையை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கதக்கது.
Must Read : காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார் ப.சிதம்பரம்!
நல்லவர்கள் ஆட்சியில் இருந்தால், சட்டம் சிறப்பாக இருக்கும். ஆனால் கெட்டவர்கள் ஆட்சி செய்தால், சட்டத்தை மீறுவார்கள் ஆரி.எஸ்.எஸ்., பாஜக வை வீழ்த்த வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.
செய்தியாளர் - கருணாகரன், மதுரை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ambedkar, Dravidam, Madurai, Thirumavalavan