Home /News /tamil-nadu /

பாமக என்பது இப்போது பாஜகவாக மாறிக்கொண்டிருக்கிறது - திருமாவளவன்

பாமக என்பது இப்போது பாஜகவாக மாறிக்கொண்டிருக்கிறது - திருமாவளவன்

திருமாவளவன்

திருமாவளவன்

பாமக என்பது இப்போது பாஜகவாக மாறிக்கொண்டிருக்கிறது என்றும் மாம்பழத்தில் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு தான் வலிமை தருமே தவிர உங்களுக்கு வலிமை சேர்க்காது எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பாமக என்பது இப்போது பாஜகவாக மாறிக்கொண்டிருக்கிறது என்றும் மாம்பழத்தில் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு தான் வலிமை தருமே தவிர உங்களுக்கு வலிமை சேர்க்காது.  தமிழ்நாட்டில் பாஜகவின் சின்னம் தாமரை மட்டும் அல்ல அதற்கு 3 சின்னங்கள் இருக்கின்றன எனவும் விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் ராதா கிருஷ்ணன், திட்டக்குடி திமுக வேட்பாளர் கணேசனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், “இன்றைக்கு இருக்கின்ற அதிமுக எம்ஜிஆர் காலத்து அதிமுக அல்ல, இன்றைய அதிமுக ஜெயலலிதா காலத்து அதிமுக அல்ல, எடப்பாடி காலத்து அதிமுக. பாரதிய ஜனதா கட்சியின் பினாமி கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் அதிமுகவிற்கு அளிக்கிற ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்கு போய்விடுவதாக தான் பொருள்.

    அதேபோல, இந்த தொகுதியில் ராதாகிருஷ்ணனை எதிர்த்து நிற்கிற சின்னம் மாம்பழம் பாமகவின் சின்னம் இல்லை. அது பாரதிய ஜனதா கட்சியின் சின்னம். இந்த தொகுதியில் இருக்கிற கை சின்னத்தை எதிர்த்து போட்டியிடும் மாங்கனி சின்னம் என்பது பாஜகவின் சின்னம். பாட்டாளி மக்கள் கட்சி அப்பாவி தொண்டர்களுக்கு  நான் தெரிவித்துக் கொல்கிறேன் .நீங்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஓட்டு போடுவதாக நினைத்துக்கொண்டு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்தால், நீங்கள் ஏமாறுகிறீர்கள் என்று பொருள்.

    ஏனென்றால், பாமக என்பது இப்போது பாஜகவாக மாறிக்கொண்டிருக்கிறது. மாம்பழத்தில் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் மோடிக்குதான் வலிமை தருமே தவிர, உங்களுக்கு வலிமை சேர்க்காது. தமிழ்நாட்டில் பாகவின் சின்னம் தாமரை மட்டும் அல்ல, பாஜகவுக்கு 3 சின்னங்கள் இருக்கின்றன.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஒரு சின்னம் அவர்களுடைய சொந்த சின்னம் தாமரை, இன்னொரு சின்னம் இரட்டை இலை, மூன்றாவது சின்னம் மாம்பழம். பாஜக இங்கு மூன்று முகங்களில் களம் காண்கிறது.

    ஒரு முகம் பாஜக முகம், இன்னொரு முகம் அதிமுக முகம், இன்னொரு முகம் பாட்டாளி மக்கள் கட்சி, மோடிக்கு இங்கு மூன்று முகங்கள் இருக்கின்றன. மருத்துவர் ராமதாஸ் முகத்தை உற்று நோக்கினால் அதில் மோடி தெரிவார். எடப்பாடி பழனிச்சாமி உற்று நோக்கினால் அதிலேயும் மோடி முகம் தெரியும்.

    Must Read : ஐடி ரெய்டுக்கு நாங்கள் பயப்படமாட்டோம்.. இது பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது - மு.க.ஸ்டாலின்

     

    தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நானே போட்டியிடுகிறேன் என்று நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். அப்படி என்றால் என்ன பொருள் என்று சிந்தித்துப் பாருங்கள்.” இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

    - செய்தியாளர் : பிரேம் ஆனந்த்
    Published by:Suresh V
    First published:

    Tags: Thirumavalavan, TN Assembly Election 2021, Virudhachalam Constituency

    அடுத்த செய்தி