• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Karunanidhi Birthday : கருணாநிதி பிறந்தநாளை ‘மாநில உரிமை நாளாக’ அறிவிக்க திருமாவளவன் கோரிக்கை

Karunanidhi Birthday : கருணாநிதி பிறந்தநாளை ‘மாநில உரிமை நாளாக’ அறிவிக்க திருமாவளவன் கோரிக்கை

திருமாவளவன்

திருமாவளவன்

கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை ‘மாநில உரிமைகள் நாள்’என அறிவிக்கவேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Share this:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்த நபராக திகழ்ந்தவர். அண்ணா மறைவுக்குப் பிறகும், எம்.ஜி.ஆர்.மறைவுக்குப் பிறகும் தமிழகத்தை ஆட்சி செய்தவர் என்ற வகையில் மட்டுமின்றி, சமூக நீதியை நிலை நிறுத்த அவர் முன்னெடுத்த பல அரசு திட்டங்களுக்காக, இன்றளவும் நினைவில் கொள்ளப்படுகிறார்.

சமூக நீதி என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே அரசின் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தவர் கருணாநிதி. தேசிய அரசியலுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியிருந்தாலும், தமக்கென ஓர் இடத்தை தேசிய அரசியலில் பிடிக்க அவர், எப்போதுமே முயன்றதில்லை. இதுபற்றி கேள்விகள் எழுந்த போதெல்லாம் ‘எனது உயரம் எனக்குத் தெரியும்’ என்றே கருணாநிதி பதிலளித்திருந்தார்.

கருணாநிதி, தமிழகத்தின் நலனுக்காகவும், தனிப்பட்ட நட்புக்காகவும் தேசிய தலைவர்களுடன் எப்போதுமே தனிப்பட்ட நல்லுறவை தொடர்ந்து கடைபிடித்தார். இந்திராவில் தொடங்கி, மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், தேவகௌடா, வாஜ்பாய், அத்வானி, சோனியா என அந்த பட்டியல் நீண்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனது நீண்ட அரசியல் பயணத்தில் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்த கருணாநிதி, 1999ம் ஆண்டில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், பிரதமர் வேட்பாளரான வாஜ்பாய் உடன் கருணாநிதிக்கு இருந்த நட்பை பயன்படுத்தி, ராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுக்க மாட்டோம் எனும் உத்தரவாதத்தை பாரதிய ஜனதாவிடம் வாங்கிக் கொண்டார். தேசிய அரசியலில் கருணாநிதிக்கு இருந்த செல்வாக்கிற்கு இதுவும் ஒரு உதாரணம்.

Must Read : தடுப்பூசி போடும் பணியை நிறுத்தும் சூழல் உள்ளது: உடனே தடுப்பூசி அனுப்ப வேண்டும்- மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து 2003ம் ஆண்டில் விலகிய கருணாநிதி, 2004ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமர முக்கிய பங்காற்றினார். தமிழ்ச் சமூகத்துக்காக கருணாநிதி ஆற்றிய பங்களிப்புக்காக பலராலும் போற்றப்பட்டது.



இந்நிலையில், திருமாவளவன் தமது ட்விட்டர் பக்கத்தில் “சூன் 3மாநில உரிமை நாள்: பெரியார், அண்ணா பாசறையில் வளர்ந்தவர். மைய-மாநில அரசுகளின் உறவுகளை ஆராய ஆணையம் நியமித்தவர். மாநில உரிமைகளுக்கு அடித்தளம் அமைத்தவர். கூட்டாட்சி கோட்பாட்டுக்கு உயிர்ப்பை அளித்தவர்.
தமிழக அரசே, கலைஞர் பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிக்கவும்.” என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: