'ஆளுநர் ஒப்புதல் காலம் கடந்த முடிவு, பயனேதுமில்லை' - அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ இட ஒதுக்கீடு குறித்து திருமாவளவன் கருத்து

விசிக தலைவர் - திருமாவளவன்

ஆளுநர் ஒப்புதல் காலம் கடந்த முடிவு, பயனேதுமில்லை என அரசுப்பள்ளி மாணவர்களின் 7.5% மருத்துவ இட ஒதுக்கீடு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பல்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளது காலம் கடந்த முடிவு, பயனேதுமில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

  அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பல்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

  ALSO READ |  ’ரஜினி நல்ல முடிவை எடுத்திருக்கிறார். அவர் நல்ல உடல்நலத்தோடு பாதுகாப்பாக இருக்கவேண்டும்’ - திருமாவளவன் எம்.பி

  இதனிடையே சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் விடுதியில் மனுஸ்மிருதி தொடர்பாக பெண்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைத்துள்ள நிகழ்வில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத சட்ட மசோதாவிற்கு ஆளுநர் காலம் தாழ்த்தி ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த ஒப்புதல் பயனற்ற ஒப்புதல். மீறுவோம் என்ற பிறகு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
  ஆளுநர் ஒப்புதல் தாராவிடிலும் அதனை நடைமுறைப்படுத்துவோம் என்று தமிழக அரசாணை வெளியிட்ட பிறகு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

  ஆளுநருடைய நடவடிக்கையானது சமூகநீதிக்கு எதிரானது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. மத்திய அரசு சமூகநீதிக்கு எதிரானது. வேண்டுமென்றே காலம் கடத்துகிறார்கள் என்பது இதிலிருந்து நாம் உணர முடிகிறது. அகில இந்திய இட ஒதுக்கீட்டில் 50 சதவிகித இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தர வேண்டும் என்ற வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கொள்கை முடிவு எடுக்காத காரணத்தினால் 27 சதவிகித இடஒதுக்கீடு கூட தர முடியாது என மத்திய மோடி அரசு கூறியுள்ளது சமூக நீதிக்கு எதிரானது.

  இந்துக்களுக்கு பாதுகாப்பானவர்கள் என்று கூறிக்கொண்டு நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. எனவே, கொள்கை முடிவு எடுக்கும் வரையில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் 15 சதவீத மருத்துவ இடங்களை தரமாட்டோம் என தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது தான் மத்திய அரசு விரைந்து கொள்கை முடிவு எடுக்கும் எனவும் கூறினார்.

  எய்ம்ஸ் உறுப்பினராக சண்முகசுந்தரத்தை நியமித்தது குறித்த சர்ச்சையை உருவாக்குவது திருமாவளவனின் பிரச்சனையை திசை திருப்புவதற்கு தான் என ஏபிவிபியின் மாநில செயலாளர் கூறிய கருத்திற்கு பதிலளித்த அவர் அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறினார்.  மனுஸ்மிருதி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், என்னை சார்ந்த சமூகம் எனக்கு எதிராக உள்ளதால் தான் நான் கூறினேன். நான் ஏன் மற்ற சமூகத்தை பற்றி பேச வேண்டும். பாஜக வன்முறையை தூண்டும் வகையிலும், மதவெறியை தூண்டும் வகையிலும் வேல் யாத்திரை அறிவித்துள்ளது. பாஜக ஆக்கபூர்வ போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. மத வெறியை தூண்டும் வகையில் செயல்பட்டுவருகிறது என்றார்.
  Published by:Sankaravadivoo G
  First published: