Home /News /tamil-nadu /

திமுக உறுப்பினர்கள் 'ராஜினாமா' செய்ய வேண்டும் - திருமாவளவன் ட்வீட்

திமுக உறுப்பினர்கள் 'ராஜினாமா' செய்ய வேண்டும் - திருமாவளவன் ட்வீட்

திருமாவளவன்

திருமாவளவன்

Thirumavalavan : கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி விடுதலை சிறுத்தை கட்சிக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்து வெற்றி பெற்றார். இதேபோல, தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரத்திலும் திமுக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ள திமுக உறுப்பினர்கள் பதவி வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தை கட்சிக்கு கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் அங்கே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

    30 வார்டுகள் கொண்ட நெல்லிக்குப்பம் நகராட்சியில் இன்று, விடுதலை சிறுத்தைகள் வேட்பாளரை எதிர்த்து திமுகவினர் மனு தாக்கல் செய்தனர். இதனை அடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெயந்தி 23 வாக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் 3 வாக்குகளும் பெற்றனர். அத்துடன் 3 செல்லாத வாக்குகளும் பதிவாகின. இந்நிலையில், கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை திமுக வேட்பாளர் நெல்லிக்குப்பத்தில் தோற்கடித்துள்ளார். இது கூட்டணி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இதேபோல, தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி விசிக வேட்பாளர் சின்னவேடி என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், திமுகவை சேர்ந்த சாந்தி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்து 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் அங்கே பரபரப்பு நிலவியது.

    Must Read : சிபிஐக்கு ஒதுக்கப்பட்ட புலியூர் பேரூராட்சியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதால் பரபரப்பு

    அத்துடன், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பாப்பிரெட்டிபட்டி சாலையில் அமர்ந்து, கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லை என்று கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கே, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

     



    இந்நிலையில், “மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையையும் மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றவர்களை 'ராஜினாமா' செய்ய வைத்து 'கூட்டணி அறத்தைக்' காத்திட வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என திருமாவளவன் தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Local Body Election 2022, MK Stalin, Thirumavalavan, VCK

    அடுத்த செய்தி