பாஜகவால் ஒருபோதும் தமிழகத்தில் காலூன்ற முடியாது - திருமாவளவன்

தொல் திருமாவளன்

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளன் தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜகவால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார்.

 • Share this:
  திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளன் தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜகவால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார்.

  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். அப்போது, ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது மோடியா? இந்த லேடியா? என்று சவால் விட்டார். ஆனால் இன்று அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் கூனி குறுகிப் போய் இருக்கின்றனர்.

  கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாததால் தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சிக்கிறது. பாஜகவை வீழ்த்தத்தான் திமுக கூட்டணி உருவாகி உள்ளது. ஆகவே, பாஜகவால் ஒருபோதும் தமிழகத்தில் காலூன்ற முடியாது.

  தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை அக்கட்சி பலிகடாவாக்கி உள்ளது. பாஜக போட்டியிடும் 20 தொகுதியில் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியாது. சினிமாவில் மவுசு போனதால்தான், நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.” என்று கூறினார்.

  தொல்.திருமாவளவன் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரித்தும் பிரசாரம் மேற்கொண்டார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால், தமிழக அரசியல் களம் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகின்றது.
  Published by:Suresh V
  First published: