கூடவே இருந்து கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பதே பாஜகவின் வேலை - திருமாவளவன்

கூடவே இருந்து கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பதே பாஜகவின் வேலை - திருமாவளவன்

தொல் திருமாவளன்

கும்பகோணத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், கூடவே இருந்து கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பதே பாஜகவின் வேலை என்றும் தமிழகத்தில் பாஜக காலூன்ற கூடாது எனவும் கூறினார்.

 • Share this:
  கும்பகோணத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், கூடவே இருந்து கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பதே பாஜகவின் வேலை என்றும் தமிழகத்தில் பாஜக காலூன்ற கூடாது எனவும் கூறினார்.

  கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகனை ஆதரித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், “தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் இல்லை என்பதால் பாஜக அதிமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்து தமிழகத்தில் காலூன்றும் எண்ணத்தில் செயல்படுகிறது. அவர்களின் எண்ணம் நிறைவேறக்கூடாது. பாஜகவை தமிழகத்தில் இருந்து ஓட, ஓட விரட்ட வேண்டும்.

  தேர்தலுக்கு பின்னர் அதிமுக என்ற ஒரு கட்சியே தமிழகத்தில் இருக்காது. அதிமுக தலைவர்கள் பாஜகவில் இணைந்து விடுவார்கள். கூடவே இருந்து கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பதே பாஜகவின் வேலை. பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலைதான் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஏற்படும். வடமாநிலங்களில் பத்துக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக காலூன்ற கூடாது என்பதே எங்களின் லட்சியம். மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவார். ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும்.” என்று கூறினார்.

  முன்னதாக, தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவை ஆதரித்து பேசிய திருமாவளவன், “இந்த தேர்தல் வழக்கமான, சராசரியான தேர்தல் அல்ல. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கும், அதிமுக கூட்டணி கட்சிகளுக்கும் இடையே நடக்கிற அதிகார போட்டிக்கான தேர்தலாக நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

  திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏதோ தேர்தலுக்காக உருவான கூட்டணி அல்ல. பாஜகவை உள்ளே விடாமல் தடுக்க வேண்டும். தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. பாஜகவுக்கு எதிரான யுத்தம்தான் இந்த தேர்தல், யுத்தம் என்பதை யாரும் மறந்து விடாதீர்கள்.

  Must Read :  ஊழலால் நிலம் பறிபோய்விட்டது : சகாயத்தை பார்த்து கண்கலங்கிய மூதாட்டி

   

  எதிரணியில் போட்டியிடக்கூடிய 234 தொகுதிகளிலும் பாஜகதான் நிற்கிறது. பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட, அண்ணாவால் செழுமைப்படுத்தப்பட்ட, கருணாநிதியால் பாதுகாக்கப்பட்ட இந்த தமிழர் பூமி, சாதி வெறியர்களிடம் சிக்கிவிடக்கூடாது. மதவெறியர்களின் இலக்குக்கு இரையாகிவிடக்கூடாது.” என்று கூறினார்.
  Published by:Suresh V
  First published: