எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதிமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: திருமாவளவன்!

நல்ல கொள்கையுடைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராக வேண்டும். தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

news18
Updated: April 16, 2019, 2:31 PM IST
எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதிமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: திருமாவளவன்!
திருமாவளவன்
news18
Updated: April 16, 2019, 2:31 PM IST
தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாரிவேந்தரை ஆதரித்து, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டார்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடந்த பிரசாரத்தின் போது பேசிய திருமாவளவன், நான் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியை விட்டுவிட்டு, பெரம்பலூருக்கு நான் ஏன் பிரசாரம் செய்ய வந்துள்ளேன் என்றால், திமுக சார்பில் போட்டியிடும், இந்திய ஜனநாயகக்கட்சியின் தலைவர் பாரிவேந்தரை, பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்ற பெறச் செய்ய வைக்க வேண்டும்.

அதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அடுத்த இரண்டு நாட்களும் கடுமையாக உழைக்க வேண்டும். வெற்றிக்கூட்டணியாக உள்ள திமுக கூட்டணி 40-40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் அவர்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். திமுக கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் அனைவரும் 100 சதவீதம் வெற்றி பெறுவார்கள் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து பாமக மற்றும் தேமுதிகவை விலை கொடுத்து வாங்கியுள்ளார் என்று கூறிய திருமாவளவன், பாமக ரூ.500 கோடிக்கும், தேமுதிக ரூ.300 கோடிக்கு அதிமுக-பாஜவிடம் விலைபோயுள்ளது என்றும் திருமாவளவன் விமர்சித்தார்.

மேலும், திமுக கூட்டணி கொள்கைக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. இது தேர்தலுக்காக உருவான கூட்டணி கிடையாது. கொள்கைக்காக உருவாக்கப்பட்ட திமுக கூட்டணியின் ஒரே நோக்கம் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான்.  இந்துக்களின் பாதுகாவலன் என்று சொல்லும் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, நீட் தேர்வு போன்ற திட்டங்கள் இந்துக்களுக்கு சாதகமான திட்டங்களா என்று கேள்வி எழுப்பிய அவர், மோடியின் திட்டங்களால் அதிக அளவில் இந்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை மதிக்கவும் இல்லை, மோடியும், அமித்ஷாவும் பார்த்து பேசவுமில்லை. விவசாயிகளுக்கு எதிரான கூட்டணியாக பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இவர்கள் எப்படி இந்தியாவின் பாதுகாவலனாக இருக்க முடியும் என்றும் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

நல்ல கொள்கையுடைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராக வேண்டும். தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும், கலைஞர் இல்லாத மதசார்பற்ற கூட்டணியை வலுப்படுத்த அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கு சிதம்பரம் தொகுதியில் எனக்கு, பானை சின்னத்திலும், பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தருக்கு உதயசூரியன் சின்னத்திலும் சிந்தமாமல் சிதறாமல் வாக்களிக்க வேண்டும் என்றார்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...